Friday 26 October 2012

திருநங்கைகள் பாவ ஜென்மங்களா?


இந்தியாவின் சட்ட அமைப்பிற்கான முகவுரை இவ்வாறு சொல்கின்றது. இந்திய மக்களாகிய நாம், நம்மை உத்தமமான, சர்வ சுந்தரமுள்ள, உழைக்கும் ஜனநாயக குடியரசாக நம்மை வளர்த்துக் கொண்டதுடன், அனைத்து குடிமக்களுக்கும் நீதி, பொருளாதார, சமூக மற்றும் அரசியல் உரிமைகளை பாதுகாப்பதோடு, கருத்து, எண்ணம், நம்பிக்கை, விசுவாசம் மற்றும் மதவழிப்பாட்டு சுதந்திரத்தையும், அந்தஸ்து மற்றும் வாய்ப்புகளின் சம உரிமையையும் தனி நபரின் மரியாதையை வளப்படுத்தும் சகோதரத்தன்மையையும், மற்றும் தேசத்தின் ஒற்றுமை மற்றும் மரியாதையையும் வழங்க வேண்டும்.

ஆனால், மேலே சொல்லப்பட்ட கருத்துக்களை உண்மையிலேயே நடை முறைப்படுத்த வேண்டிய நிலையிலும், அடிப்படை உரிமைகளை செயல்படுத்த வேண்டிய நிலையிலும், குடிமக்கள் என்னும் பதம், திருநங்கைகளைத் தவிர்த்து, ஆண், பெண் ஆகிய இரு இனத்தவருக்கு என குறுகிவிடுகின்றது. சொல்வதானால் நாம் அவர்களை மனித பிறவிகளாகவே கருத தவறிவிடுகின்றோம்.

நாட்டில் இந்த பிரிவு குடிமக்களால் சந்திக்கப்படும் கஷ்டங்கள், வேறு எந்தவொரு வகுப்பினரையோ அல்லது பிரிவினர்களைவிட அதிகமாகும். இந்த பிரிவு குடிமக்களுக்கு எதிராக மக்கள் தடையற்ற பாகுபாட்டை கடைபிடிக்கின்றனர். இது, இந்த திருநங்கைகளை பிச்சை எடுத்தல், விபச்சாரம் அல்லது சில நேரங்களில் மிரட்டி பணம் பரித்தல் என இவ்வகை நிலைகளைத் தவிர வேறு தொழில் துறைகளில் காண்பது அரிதாகவுள்ள நிலையில் இருந்தே தெளிவாகத்தெரிகின்றது.

அரசியல், சமூகம் அல்லது பொருளாதாரத்தில் சிறிய அளவு பிற்படுத்தப்பட்ட தன்மையை காண்பிக்கும் மற்ற பிரிவினருக்கு, நாம் ஒரு வகையான ஒத்துழைப்பின் செயல்பாட்டின் கோட்பாட்டை அவர்களது உயர்வுக்காக வைத்திருக்கின்றோம். அது சில சட்டங்களை குறிப்பிட்ட வகுப்பினர், பழங்குடி இனத்தவர்களுக்கென ஒதுக்கீடு செய்வதாகட்டும் அல்லது பாராளுமன்றத்திலோ,  சட்டமன்றத்திலோ அவர்களுக்கு பதவி ஒதுக்கீடு செய்வதில் இருந்து, பொது வேலை வாய்ப்பு, கல்வி நிறுவனங்களில் அனுமதி வரை பல காரியங்களை செய்கிறோம். ஆனால் இவ்வகை குடிமக்களுக்காக எதுவுமே கிடையாது.

இதன் மிகத் தெளிவான காரணம் என்னவெனில், நாம் அவர்களை இந்நாட்டின் குடிமக்களாக அல்ல, முதலில் அவர்களை மனிதர்களாகக் கூட நடத்துவதில்லை. நாம் அவர்களை வெறுத்து, தனிமைப்படுத்தி அவர்களிடம் ஒரு முரட்டுத்தனமான நடத்தையை கையாள்கிறோம். இது அவர்களை அவர்களுடைய பாதுகாப்பிற்காக, குழுக்களாக நடமாடுவதை கட்டாயமாக்குகின்றது.

மேலும் நமது சட்டமைப்பு, மதம், இனம், சாதி, பாலினம் அல்லது பிறந்த இடம் என இவற்றின் எந்த அடிப்படையிலும் வேறுபாடு பார்ப்பதை தவிர்க்கின்றது. ஆனால், இதற்கு நேர்மாறாக, பெரும்பாலான அரசு உத்தியோகங்கள் அல்லது பல்கலைக் கழகங்களின் விண்ணப்பப் படிவங்களில் பாலினம் என்னும் தலைப்பின் கீழ் மூன்றாவது தேர்வு கிடையாது. இவை அனைத்துமே திருநங்கைகளின் உரிமைகளையும் அவர்களது வாழ்வாதாரத்தை மறுக்கக் கூடிய செயல்களின் பிரதிபலிப்பாகும்.

இதனால், அவர்கள் நமது பார்வையில் இல்லாதவர்களாகவே இருக்கின்றனர். அல்லது இத்தனை வசதிகள் அனைத்திற்குமான உரிமைகள் மறுக்கப்பட்டுள்ளதை தெளிவாக இவை காண்பிக்கின்றன. மேலும் அவர்கள் சுய முன்னேற்றத்துக்கும் அல்லது அவர்களின் வாழ்வு மேலும் வளர்ச்சியடையவும் அனைத்து வாய்ப்புகளும் மறுக்கப்பட்டுள்ளன. இவை அனைத்தும் நடப்பதற்கு  காரணம் அவர்கள் மேல் எந்த தவறும்  இருப்பதினால் அல்ல ஆனால், அவர்கள் வித்தியாசமான இயற்கை அம்சங்களுடன் பிறந்திருப்பதே காரணாகும். இந்நிலையில், செயற்கைத்தனம் என எதுவுமில்லை. இந்நிலை, இந்து புராணங்களில் சொல்லப்பட்டிருக்கின்றது. மிக முக்கிய கடவுளான சிவன், அர்த்தநாரீஸ்வராக (பாதி ஆண், பாதி பெண்) சித்தரிக்கப்படுகின்றார்.
இந்திய பாராளுமன்றம், நாட்டில் சட்டங்களை அமைப்பதில் உச்சகட்ட அமைப்பாகும். இது எப்போதெல்லாம் சமுதாயத்தில் பல பிரிவுகளின் உரிமைகளோ அல்லது அவர்களது நிம்மதியான வாழ்வுரிமையோ மீறப்படும் போது, அவ்வுரிமைகளை பாதுகாக்க சட்டங்களை அமைக்கின்றது. ஆனால், பழங்காலம் முதற்கொண்டே அவர்கள் இருந்து வந்தாலும் மேலும் அவர்கள் இருப்பது இந்திய புராணங்களிலும், மத புனித நூல்களிலும் சொல்லப்பட்டிருந்தாலும், திருநங்கைகளின் உரிமைகளுக்காகவும் அல்லது அவர்களை வன்முறையில் இருந்து பாதுகாக்கவும் எந்த சட்டமும் இந்தியாவில் இதுவரை இல்லை.

இந்தியாவில் பிற்படுத்தப்பட்ட வகுப்பினர், பழங்குடியினர்களை அவர்களது சாதிப் பெயரைக் கொண்டு அழைப்பது குற்றமாகும். மற்றும் அவ்வாறு செய்பவர்களுக்கு குறைந்தபட்ச தண்டனையை அளிக்க வேண்டுமென சட்டங்கள் பரிந்துரைக்கின்றன. ஆனால், திருநங்கைகளைப் பொறுத்தவரையில் நமது சட்டத்தை இயற்றுவோர் வேறுபாட்டை காண்பிக்கின்றனர்.

மக்கள் அவர்களைப் பல இழிவுபடுத்தும் பெயர்களைக் கொண்டு அழைக்கின்றனர். ஆனால், இவ்வித கொடுமைகளுக்கு எதிராக அவர்களால் புகாரளிக்க இயலாது. ஏனெனில் இக்குற்றத்தை காவல்துறையினர் தாங்களே செய்கின்றனர்.

வன்கொடுமைகளைத் தவிர்க்கும் சட்டத்துடன் வேறு பல சட்டங்களும் அவர்களது சார்பாக உள்ளது. ஏனெனில் அவர்கள் சமூகத்தின் பிற்படுத்தப்பட்ட பிரிவுகளுக்கு உட்பட்டவர்களாவர்.

ஆனால், திருநங்கைகளின் நிலையை பார்க்கும் போது, சமுதாயத்தில் அவர்களைப் போன்ற பிற்படுத்தப்பட்ட பிரிவினர் வேறு யாருமில்லை என்பதில் யாருக்கும் சந்தேகமே இருக்காது. வேறு எந்த ஒரு பிரிவினரும் அவர்களது பாலினம் தெரிந்தவுடனேயே குடும்பத்தைவிட்டு வெளியேற கட்டாயப்படுத்துவதில்லை. மேலும் வேறு எந்த பாலினத்தவரும் இவர்களைப் போல இவ்வளவு வெறுப்புடன் சமுதாயத்தால் ஒதுக்கப்படுவதில்லை.
நாம் அவர்களை பள்ளிகளில், அலுவலகங்களில், பாராளுமன்றத்தில் அல்லது வேறு முக்கிய இடங்களில் அல்லது வேறு முக்கியமான வளர்ச்சி பணிகள் நடைபெறும் இடங்களில் பார்க்க முடியாது. இதனால் அவர்களால் தேவையான அளவு பணம் ஈட்டவோ அல்லது மரியாதையுள்ள வாழ்க்கைத் தரத்தை வாழவோ மற்றும் நாட்டுக்கு தங்களது பங்களிப்பை வழங்கவோ முடிவதில்லை.

பல வழக்குகளில் உச்சநீதிமன்றம் 21&ம் சட்டப்பிரிவின் கீழ் வரும் வாழ்வதற்கான உரிமை என்பது சாதாரண மிருகத்தனமான வாழ்க்கையை குறிப்பதில்லை. ஆனால், ஒரு அர்த்தமுள்ள மற்றும் மதிப்புள்ள வாழ்வையே குறிக்கின்றது என்பதையும் தெரிவிக்கின்றது. இப்பிரிவினர் சமுதாயத்தில் மட்டும் பிற்படுத்தப்பட்ட நிலையிலேயே இருக்கின்றனர். இதில் நாம் மிகவும் அதிகமாக கவனிக்க வேண்டிய அம்சம் என்னவெனில், திருநங்கைகள் அரசியலிலும் குறைவாகவே பிரதிபலிக்கப்படுகின்றனர். அவர்கள் பாராளுமன்றத்திலோ, சட்டமன்றத்திலோ அல்லது உள்ளூர் அரசியல் அமைப்புகளில் கூட காணப்படுவதில்லை. மற்ற பிரிவினருக்கான உள்ளதைப் போல எந்தவொரு தேசிய அமைப்பும் இவர்கள் நலனுக்கென்று இருப்பதில்லை.

அவர்கள் செயலற்றவர்கள் போல நடத்தப்படுகின்றார்கள். நாம் அவர்களை மனிதர்களாக நடத்த மறுக்கின்றோம். ஒரு தேசத்தின் பெருந்தன்மை அது அதனுள் இருக்கும் மிகவும் பலவீனமானவர்களை எவ்வாறு நடத்துகின்றது என்பதை வைத்தே அளவிடப்படுகின்றது.

இனிமேலாவது நாம் அவர்களை மற்ற சமுதாயத்தினரோடு இணைப்பதில் முனைப்புடன் செயல்பட ஆரம்பிக்க வேண்டும். அதனை வழக்கமான பள்ளிகள் மற்றும் கல்லூரிகளில் அவர்களுக்கு அனுமதி வழங்குவதில் இருந்துத் தொடங்க வேண்டும். இதனால் சாதாரணமாக வளர்ந்து முறையான கல்வி பெற்ற மற்றவர்களுடன் அவர்கள் இணைந்து உளவுவார்கள். இதனால் அவர்களும் முறையான கல்வி பெற்று தேசிய வருமானத்திற்கு பங்களிப்பதுடன், மற்றவர்களைப் போல சாதாரண வாழ்க்கையை மேற்கொள்வார்கள்.

மேலும் சாதாரண மக்களைப் போல அவர்களுக்கும் நாம் சம உரிமை வழங்கினால்தான் நாம் சட்டமைப்பின் பற்றுதலோடு உண்மையான சுதந்திர ஜனநாயகமாவோம்.

No comments:

Post a Comment