Friday 26 October 2012

விடுதலைப் பத்திரம் & குழப்பங்களும், தீர்வும்



JUDGMENT                 -----  Article 55A  Vs  55C

மாவட்ட பதிவாளருக்கு எதிரான எஸ். சத்திய நாராயணன் என்பவரின் வழக்கு சென்னை உயர்நீதி மன்றத்தின் மதுரை நடுவர் ஆய்வு மன்றத்தின் முன்பு 
முன்னிலை :
மதிப்பிற்குரிய திரு.ஜஸ்டீஸ்
எஸ்.மணிகுமார் அவர்கள்
W.P. (M.D.) எண். 4996/2007
எஸ்.சத்தியநாராயணன்..... மனுதாரர்
எதிராக
1 மாவட்ட பதிவாளர், பதிவுத் துறை, திருச்சி
2. துணைப் பதிவாளர், ஸ்ரீரங்கம், திருச்சி
3.உதவி ஆய்வாளர் பதிவுத்துறை, 
(உதவி  முதன்மை ஆய்வாளர், பதிவு செய்யும் துறை)

திருச்சி.... பிரதிவாதிகள் முறையீடு இதில் 09.02.2007 அன்று முதல் பிரதிவாதியின் 1.4/04/A1ன் தொடர்பாக நடை பெற்ற விசாரணைகளுக்கு சம்பந்தமுடைய அனைத்து பதிவேடு களைக் கோரியும் மற்றும் அவற்றை தள்ளுபடி செய்து, நீக்கக் கோரியும், மேலும் இதனால், பிரதிவாதிகள் நேரடியாக இதில் இரண்டாம் பிரதிவாதி யின் கோப்பில் இருந்து ஆவண எண்.174/02வை விடுவிக்க கோரியும், ஆவணக் கேட்பு நீதிப் பேராணையை வழங்குமாறு விண்ணப்பித்து, இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் 226&ஆம் சட்டப்பிரி வின் கீழ் பதிவு செய்யப்பட்ட மனு

மனுதாரருக்காக: திருமதி கீதா
பிரதிவாதிகளுக்காக: திரு.பால ராமசாமி
(சிறப்பு அரசு தரப்பு வழக்கறிஞர்)
உத்தரவு:
19.02.2007&ன் படி இதில் முதல் பிரதிவாதியான மாவட்ட பதிவாளர் (திருச்சி), அவர் களின் உத்தரவினை எதிர்த்து தற்போதைய உத்தரவு மனு பதிவு செய்யப்பட்டுள்ளது.

மனுதாரரின் வழக்கு என்னவென்றால், திருச்சியில், வார்டு எண்.2, S.No.2487ல் 1126 சதுர அடி அளவுள்ளதும், மற்ற பழைய T.S.No.1135, புதிய வார்டு , புதிய பிளாக் 13, புதிய டவுன் கணக்கெடுப்பு எண். 98ல் 840 சதர அடி அளவுள்ளதுமான இரண்டு உடைமைகளும் மனுதாரரின் தாயாரால் முறையே 1985 மற்றும் 1995 ஆகிய ஆண்டுகளில் வாங்கப்பட் டுள்ளன. அதன் பிறகு, அவரது தாயார் 10.6.1995 என தேதியிட்டு, இரண்டு விற்பனை ஒப்பந்தங்களின் கீழ் அவரால் வாங்கப்பட்ட இரண்டு சொத்துக்களையும் மனுதாரர் மற்றும் அவரது சகோதரர் திரு.நாகரா ஜன் ஆகிய இருவரது பெயருக்கும் தனது இறுதி வாக்கு மூலம் மற்றும் உயிலில் மாற்றி கொடுக்குமாறு எழுதியிருக்கின்றார். மேலும்,  18.08.1995ல் மனுதாரரின் தாயார் மரணமடைந்த தாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் உயிலின் படி, இவ்விருவரும் அச்சொத்துகளுக்கு ஒருங்கிணைந்த உரிமையாளர்களாவர். மேலும் மனுதாரரின் சகோதரர் அவரது பகுக்கப்படாத உரிமை, மனுதாரருக்கு சாதகமாக ரூ.50,000/க்கு அளித்து இதனை செயல்படுத்தும் விதமாக, ஒரு விடுவிக்கும் ஒப்பந்தத்தையும் நடைமுறைப்படுத்தி, மேலும் இவ்வொப்பந் தம் பதிவு செய்யும் நாளான 12.11.2002 அன்றும் உதவி பதிவாளர் (ஸ்ரீரங்கம்) முன்பும் சமர்ப் பிக்கப்பட்டுள்ளது. எனினும், சட்டப் பிரகாரம் நடைமுறைப்படுத்தியப் பிறகும் இரண்டாம் பிரதிவாதி, மேலே சொல்லப்பட்ட ஆவணத்தின் தன்மையை தெளிவுப்படுத்த வேண்டியும், மற்றும் இதில் முதல் பிரதிவாதியான திருச்சி மாவட்ட பதிவாளரிடம் இருந்து தற்போதைய பரிவர்த்தனைக்கான முத்திரைச்  சட்டத்தின் சரியான சட்டப் பிரிவைவர வேண்டியும், ஆவணத்தை தன்னிடமே வைத்துக் கொண்டார்.

மேலும், 18.02.2003&ம் தேதி யின் விசாரணைகளின் போது, 2004ன் பக்கம் 173 மற்றும் 174ல் உள்ள, மனுதாரரின் சகோதரரால் நடைமுறைப்படுத்தப் பட்ட ஆவணங்கள் இந்திய முத்திரைச் சட்டத்தின் 55(சி) சட்டப் பிரிவின் கீழ் வருவது எனவும் மேலும் அவ்வுடைமைக்கான சந்தை மதிப்பை பொறுத்து முத்
திரை வரி சேகரிக்கப்படும் எனவும் முதல் பிரதிவாதியினால் தெளிவுப் படுத்தப்பட்டுள்ளது. மேலும் முதல் பிரதிவாதி, மனுதாரரிடம், 18.02.2003ம்  தேதியின் விசாரணைகளில் அவர் திருப்தி அடையவில்லை என்றால், அவர் சென்னை, பதிவு செய்யும் துறையின் முதன்மை ஆய்வாளர் முன்பு முறையீடு செய்யலாம் எனவும்  தகவல் அளித்துள்ளார். மேற்கூரியபடி 09.03.2004 அன்று மனுதாரர் அனைத்து ஆவணங்களுடன் பதிவு செய்யும் துறையின் முதன்மை ஆய்வாளர், சென்னை, முன்பு முறையீடு செய்தார். பதிவு செய்யும் துறையின் முதன்மை ஆய்வாளர், இதில் முதல் பிரதிவாதியினால் எந்த ஒரு இறுதி உத்தரவும் பிறப்பிக்கப்படவில்லை. எனவே, இம்முறையீட்டை தக்க வைக்க இயலாது எனக் கூறி மனுதாரரால் பதிவு செய்யப்பட்ட மனுவை திரும்ப அளித்ததோடு, முதல் பிரதி வாதியின் முன்பு ஒரு முறையீடு செய்யுமாறு மனு தாரரிடம் தெரிவித்துள்ளார். மேலும் 03.04.2006 அன்று நடந்த விசாரணைகளில் முதல் பிரதிவாதி மனுதாரரிடம், அவரது சகோதரரால் நடைமுறைப்படுத்தப்பட்ட விடுதலை ஒப்பந்தம் இந்திய முத்திரை சட்டத்தின் (55 சி) &பிரிவின் கீழ் வரும் எனவும், மேலும் சட்ட விசாரணைகளை இந்திய முத்திரை சட்டத்தின் பகுதிகள் 38 மற்றும் 40&களின் கீழ் எடுப்பதன் மூலம், முத்திரை வரியாக ரூ.87,137/ சேகரிக்கப்பட வேண்டும் என முடிவெடுக்கப்பட்டதாக தெரிவிக்கின்றது.

மேலும், இந்த ஆவணம் ரூ.2000/ மதிப்புள்ள முத்திரைத் தாளின் மீது மட்டுமே நடை முறைப் படுத்தப்பட்டுள்ளதால், விடுபட்ட முத்திரை வரித் தொகையாக மேலும் ரூ.85,137 விதிக்கப்பட்டுள்ளது. எனவே மேற்கூறப்பட்டத் தொகை ஏன்  விதிக்கப் படக்கூடாது என்பதற்கான காரணத்தை தெரிவிக் கவும்  மற்றும் விதிக்கப்பட இருக்கும் அபராதத் தொகைக்காகவும் மனுதாரர் அழைக்கப்பட்ட தாகவும் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.

மேற்கூரியதை பெற்றவுடன் மனுதாரர் முதல் பிரதிவாதியிடம், விடுதலை ஒப்பந்தம் தனது சகோதரரால் நடைமுறைப்படுத்தப்பட்டது. மேலும் அது இந்திய முத்திரை சட்டத்தின் 55A சட்டப் பிரிவின் கீழே வரி விதிக்கப்பட வேண்டியது என்ற விளக்கத்தை சமர்ப்பித்துள்ளார்.

மனுதாரரால் சமர்ப்பிக்கப்பட்ட விளக்கத்தில் திருப்தியடையாததால், பிரதிவாதிகள், சம்பந்தப்பட்ட ஆவணங்கள் இந்திய முத்திரைசட்டத்தின் 55(சி) சட்டப்பிரிவின் கீழே முத்திரையிடப்பட வேண்டும் எனவும், மேலும் மேற்கூறிய ஆவணத்திற் கான விடுபட்ட தொகையாக ரூ.85,137/ விதிக்கப்பட வேண்டும் என குறிப்பிட்டு மார்ச் 2006ல் காரணத்தைக் காட்டச் சொல்லி அற்விப்பினை வழங்கியுள்ளனர். எனவே ஏன் குறிப்பிடப்பட்ட தொகை முத்திரை வரியாக விதிக்கப்படக் கூடாது என்பதற்கான காரணத்தை காண்பிக்குமாறு மனுதாரர் அழைக்கப்பட்டார். 15 நாட்களுக்குள் இதனை காண்பிக்கத் தவறினால், அபராதம் விதிக்கப்படும். அதனால், மனுதாரர் முதல் பிரதிவாதி முன்பு 03.07.2006 அன்று விளக்கத்தை சமர்ப்பித்தார். விளக்கம் பரிசீலனை செய்யப்படாத நிலையில் மனுதாரர், இரண்டாம் பிரதிவாதியின் கோப்பு களில் இருக்கும் எண்  174/2004 என்னும் ஆவணத்தை விடுவிக்கும் நோக்கத்தில் இந்த நீதிமன்றத்தின் முன்பு ஆவணக் கேட்பு பேராணை மனுவை 2007ன் W.P எண் & 1084 ஒன்றை பதிவு செய்தார்.

இது தொடர்பான விசாரணையின் போது, விதிமுறைகளின்படி சிறப்பு அரசு வழக்கறிஞர், மனுதாரர்பதிவுசெய்தமறுப்புகளுக்கு 12.02.2007ல் பிரதிவாதிகள் ஒரு உத்தரவை பிறப்பித்துள்ளதாக ஆதாரங்களை சமர்ப்பித்தார். எனவே 19.02.2007&ன் உத்தரவின் பேரில் இந்நீதிமன்றம் ஆவணக் கேட்புப்
பேராணை மனுவை தள்ளுபடி செய்து, மனு தாரருக்கு உடனே உத்தரவை வழங்குமாறு முதல் பிரதிவாதிக்கு உத்தரவிட்டது. எனினும் மனுதாரர், 19.02.007&ன் உத்தரவை 2007 மார்ச் மாதத்தில் தான் பெற்றுள்ளார். இதற்குள், விசாரணைகளை, இந்திய முத்திரை சட்டத்தின் 38 மற்றும் 40ஆம் பிரிவுகளின் கீழ், எடுப்பதன் மூலம், முத்திரை வரியாக ரூ.73,905/ மற்றும் முத்திரை வரியாக விதிக்கப்பட்ட தொகையாக ரூ.71,905 மற்றும் அபராதத் தொகையாக ரூ.2155/&ம், மொத்தமாக ரூ.74,060/& விடுப்பட்ட முத்திரை வரித்தொகையாக சேகரிக்கப்பட வேண்டும் என முடிவெடுக்கப்பட்டதாக மனுதாரருக்கு தெரிவிக்கப்பட்டது. இதனால் அதிருப்தியடைந்து, முதல் பிரதிவாதியின் உத்தரவு தன்னிச்சையான, சட்ட விரோதமான மற்றும் சட்டத்தில் நிறுவ முடியாததுமாய் இருப்பதாக முறையிட்டு தற்போதைய ஆவணக் கேட்பு பேராணை மனு மற்றவற்றிற்கிடையில் பதிவு செய்யப்பட்டுள்ளது. மேலும், இவ்வாறு ஒரு மறுத்துரைக்கப்பட்ட ஆணையை பிறப்பிப்பதற்கு முன்பு பிரதிவாதிகள் விசாரணையை நடத்தியிருந்தால், மனுதாரர் கேள்விக்குரிய இந்த ஆவணம், இந்திய முத்திரை சட்டத்தில் 55(C) சட்டப்பிரிவின் கீழே தான் வரும் என்பதை தகுந்த சான்றுகள் மற்றும் அரசு உத்தரவுகளை சமர்ப்பித்து, பிரதிவாதிகளிடம் ந¤ரு பித்திருப்பார் எனவும் முறையிடப்பட்டு உள்ளது.

ஆவணக் கேட்புப் பேராணை மனு என்னதான் 2007&ஆம் ஆண்டில் பதிவு செய்யப்பட்டிருந்தாலும், அவர்களுக்கு சாதகமான ஆணையுறுதி, ஆவணங்களில் உள்ள காரியங்களை வலியுறுத்தி, பிரதிவாதிகளால் எந்தவொரு எதிர் ஆணையுறுதி ஆவணமும் பதிவு செய்யப்படவில்லை.

பதிவு செய்வதற்காக, சமர்ப்பிக்கப்பட்ட உடைமையின் மீது செலுத்தப்பட வேண்டிய முத்திரை வரியின் சதவீதத்தை பரிந்துரைக்கும் இந்திய முத்திரை சட்டத்திற்காக வகுக்கப்பட்ட 55-A  என்னும் சட்டப்பிரிவை மேற்கோள் காண்பித்து, மனுதாரர் சார்பில் வாதாடும் வழக்கறிஞர் திருமதி கீதா அவர்கள், விடுதலை ஒப்பந்தம் மனுதாரரின் சகோதரரால் முறையே 10.06.199&ல் அவரது தாயாரால் நடைமுறைப்படுத்தப்பட்ட உயிலின் மூலம் சொந்தமாக்கப்பட்ட பிரிக்கப்படாத சொத்தில் அவரது, பங்கில் உருவாக்கப்பட்டது. மேலும் ஒப்பந்தம் 23கி  பிரிவின்படியோ அல்லது சட்டப் பிரிவு 55 கி வின் உட்பிரிவுகளில், ஙி.சி மற்றும் ஞி படியோ வழங்கப்பட்டதல்ல. எனவே இதன் மதிப்பிற்கு ஒவ்வொரு ரூ.100/&க்கும் ரூ.1/& முத்திரை வரியாக செலுத்தப்பட வேண்டும் அல்லது விடு தலைக்காக இருக்கும் சொத்தின் சந்தை மதிப்பின் ஒரு பகுதி, அதிகபட்சமாக ரூ.10,000/& செலுத்தப்பட வேண்டும் என சமர்ப்பித்தார்.

இதனடிப்படையில், அவர் இந்நீதிமன்றத்தில் சட்டத்தின் 23&ஆம் பிரிவு மற்றும் முத்திரை சட்டத்தின் திட்டத்தின் பிரிவுகள் 55, A,C மற்றும் D ஆகியவற்றைக் குறித்தும் விளக்கினார். மேலும் 11.01.2002 அன்று சென்னை, பதிவுத் துறையின் முதன்மை ஆய்வாளர், அனைத்து மாவட்ட பதிவாளர்களுக்கும் மற்றும் பதிவுத் துறையின் அனைத்து இணை முதன்மை ஆய்வாளர்களுக்கும் அனுப்பிய கடிதத்தை இந்நீதிமன்றத்தில் மேற் கோள் காட்டி, சட்டப்பிரிவு 55 A வின் கீழ் பதிவு செய்வதற்கு ஏதேனும் விடுவிக்கும் ஒப்பந்தம் வரும் சமயத்தில், சட்டப்பிரிவு 58 (A) (1) என்னும் திட்டத்தின் கீழ் சமர்ப்பிக்கப்படும் சொத்துக்கான சரியான முத்திரை வரி குறித்து, மேற்குறிப்பிட்ட அனைத்து அதிகாரிகளுக்கும் குறிப்பிட்ட விதி முறைகள் வழங்கப்பட்டிருக்கின்றன என்றும், அவர் சமர்ப்பித்தார் மற்றும் முத்திரை வரியை விதிப்பதற்காக, அந்த சொத்தின் மீது எந்தவொரு விதிமுறைகளுக்குட்பட்ட மதிப்பையும் சுமத்த வேண்டியதில்லை. மேலும் அவர், 01.03.1999&ல், சென்னை, தலைமைச் செயலகம், அரசு வியாபார வரிகள் துறையின் செயலாளரின் கடிதம் எண்.4860/J1/98-A வையும் மற்றும் 10.08.2006ல் வியாபாரவரிகள் மற்றும் பதிவுத் துறையின் அரசாணை எண். MS.No.85யையும் அரசு தரப்பு கடிதங்களின் பொருள் என மேற்கோள் காட்டி, இவற்றில் Ôகுடும்பம்Õ என்னும் வார்த்தை சகோதரர்கள் மற்றும் சகோதரிகளை உள்ளடக்கியதாகும் என்றும் நீதிமன்றத்தில் சமர்ப்பித்தார். எனவே, சகோதரர் களுக்கு இடையே விடுவிப்பு ஒப்பந்தம் நடை முறைப்படுத்தப்படும் நிலையில், 55-C பிரிவு இதில் சேர்க்கப்படுவதில்லை. மேலும் அத்தகைய சூழ்நிலைகளில், சொத்தின் மீது செலுத்தப்பட வேண்டிய முத்திரை வரி ஒவ்வொரு பகுதியின் 100&க்கும் ரூ.1/ ஆகும். விடுதலை தொடர்பான, சொத்தின் சந்தை மதிப்பின் ரூ.13/ அல்ல.

11.01.2002 அன்றும் 45794/C5/2001 என்னும் கடிதம், சென்னை, பதிவுத்  துறையின் தலைவரிடம் இருந்து, அனைத்து பதிவுத் துறையின் இணை முதன்மை ஆய்வாளர்களுக்கும் மற்றும் அனைத்து மாவட்ட பதிவாளர்களுக்கும் அனுப்பப்பட்டது. இதில் விற்பனை, அன்பளிப்பு, தீர்வை, பங்கிட்டளித்தல், பங்கு போன்றவற்றின் மீது உருவாக்கப்படும் இணை உடைமையுரிமைத் தொடர்பாகஉள்ள வித்தியாசங்களையும், அல்லது வேறொருவர் சொத்தின் மீது ஏதாவது ஒரு தரப்பினர் பகுக்கப்படாத பங்கை பெறுவது மற்றும் குறிப்பிட்ட நிலைகளான சேர்ந்து சுதந்திரிக்கப்பட்ட சொத்துக்கள், வாரிசு முறையில் சுதந்தரிக்கப்பட்ட சொத்துக்கள் தொடர்பான விடுதலை உரிமைகளைக் குறித்தும் பதிவுத் துறைகளின் முதன்மை ஆய்வாளர், பதிவு செய்யும் துறை, சென்னை, அவர்களின் தெளிவாக்கங்கள் இருந்தன. மனுதாரரின் வழக்கறிஞர் இதனை மேற்கோள் காண்பித்து, ஒரு தனிப்பட்ட நபரின் செயல்பாட்டினால், விற்பனை அன்பளிப்பு  பான்றவற்றினால் உருவாக்கப்படும் இணை உடைமையுரிமைகளின் உரிமைகளுக்கும் மற்றும் சேர்ந்து சுதந்தரித்தல், விருப்ப ஆவண வழி உரிமைகள் போன்றவற்றினால், உருவாக்கப் படும் இணை உடைமையுரிமைகளின் உரிமைகளுக்கும் இடையில் வித்தியாசம் உள்ளது என சமர்ப்பித்தார். மேலும் விருப்ப ஆவண வழி உரிமையின் மூலம் உடைமைகள் சுதந்திரக்கப்பட்டால், அவ்வுடைமையின் உயிலின் மூலம் வரும் விடுதலையுரிமை, அதன் இணை உரிமையாளர் அல்லது குடும்ப உறுப்பினர், இவ்வழக்கில், மனுதாரரின் சகோதரரிடம் வரும்போது, சட்டப்பிரிவு 55-A வின் முத்திரை வரியே பொருந்தும். மற்றும் இந்திய முத்திரை சதட்டத்தின் மி திட்டத்தின் 55C சட்டப்பிரிவின் கீழ் வராது, எனவும் சமர்ப்பித்தார். மேற்சொன்ன காரணங்களால் குறைக்கூறப்பட் டுள்ள ஆவண எண். 174/02 வை விடுவிக்க வேண்டும்மென பிரதிவாதிகளுக்கு உத்தரவிட வேண்டும் எனவும் விண்ணப்பித்தார்.

இதனை எதிர்த்து, சிறப்பு அரசு தரப்பு வழக்கறிஞரான திரு.பாலராமசாமி அவர்கள்,  மூலம் ஆவண எண் .174/2002- வின் விடுவிப்பு ஒப்பந்தம் 08.11.2002 அன்று சமர்ப்பிக்கப்பட்டது. எனவே, இதற்காக செலுத்தப்பட வேண்டிய முத்திரை வரி இந்திய முத்திரை சட்டத்திற்கான மி திட்டத்தின் 55C சட்டப்பிரிவின் கீழ் நிர்ணயிக்கப்பட வேண்டும் என சமர்ப்பித்தார். மேலும் அவர், முன்னர் இந்திய முத்திரை சட்டத்திற்கான மி  திட்டத்தின் 55 A சட்டப்பிரிவின்படி, 05.03.2000 வரை, மற்றொரு நபர் மீதோ அல்லது குறிப்பிட்ட எந்த ஒரு உடை மையின் மீதே ஒரு நபர் தள்ளி வைக்கக் கோரி ஒரு விடுதலை ஒப்பந்தத்தை உருவாக்கினால் அதற்காக பிணையக் கடன் ஒப்பந்த பத்திரமாக 3%, முத்திரை வரியாக செலுத்தப்பட வேண்டும். மற்றும் இந்திய முத்திரைச் சட்டத்திற்கான மி திட்டத்தின் 55B சட்டப்பிரிவின் கீழ் இரவல் பெயர் உரிமையின் விடுவிப்பின் போது, விடுவிப்பின் முக்கிய அம்சமான, சொத்தின் சந்தை மதிப்பின் மீது முத்திரை வரி செலுத்தப்பட வேண்டும் எனவும் சமர்ப்பித்தார்.

மேலும் அவர், மனுதாரரின் சகோதரரும், இணை உரிமையாளருமானவர். 18.12.2002 அன்று மனுதாரருக்கு சாதமாக, அவர்களிருவருக்கும் பொது உரிமையுடைய சொத்தின் மீது தனது உரிமையை விட்டுக் கொடுத்து ஒரு விடுதலை ஒப்பந்தத்தை செயல் படுத்தினார். மற்றும்  சொல்லப்பட்ட உடைமை சட்டத்தின் 55கி ஆம் பிரிவின் கீழ் வரவில்லை என்பதால், அது சந்தை மதிப்பின் மீது மட்டும் 13% மட்டுமே மதிப்பிடப்பட வேண்டும். இது 16.12.2004 வரை மட்டுமே செயல்பாட்டில் இருந்தது. திட்டத் தின் 55C சட்டப்பிரிவு 2004ஆம் வருடத்தில் தான் 2004ன் 31ஆம் சட்டத்தினால், திருத்தியமைக்கப்பட்டது. இதனால் திருத்தியமைப்பதற்கு முன்பு இருந்த சொற்றொடர் மற்றும் கூற்றான மற்றொரு இணை உரிமையாளர் மற்றும் கூற்று, சொற்றொடர் மற்றும் கூற்றான குடும்ப உறுப்பினர் அல்லாத மற்றொரு உரிமையாளர் மற்றும் கூற்று என மாற்றியமைக்கப்பட்டது எனவும் சமர்ப்பித் தார். எனவே, அவர், 16.12.2004 வரை ஒரு இணை உரிமையாளருக்கு சாதகமாக மற்றொரு இணை உரிமையாளரால் வழங்கப்படும் விடுதலை ஒப்பந்தத்திற்கு பொருந்தும் முத்திரை வரி சந்தை மதிப்பின் 13% தானே ஒழிய ஆவண மதிப்பின் 1% அல்ல எனவும் எதுத்துக் கூறினார்.

அவர் மேலும், 2004&ன் 31ஆம் சட்டத்தின் திருத்தியமைப்பிற்கு முன்பு நடப்பில் இருந்த 55C சட்டப்பிரிவு, எந்தவொரு உடை மையும் விடுவிக்கப்படும் போது (23A பிரிவின்படி வழங்கப்படும் விடுதலை அல்ல) அல்லது இரவல் பெயர் உரிமையின் விடுவிப்பின் போதும், ஒரு குறிப்பிட்ட சொத் தின் எதிராகவோ அல்லது ஒரு நபரின் மீதோ உள்ள கோரும் உரிமையை ஒரு நபர் விட்டுக் கொடுப்பாரானால், செலுத்தப்பட வேண்டிய முத்திரை வரி, பிணைய கடன் ஒப்பந்தப் பத்திரத்திற்கு செலுத்தப்படும் அதே முத்திரை வரித் தொகையாகும். இந்த முறை மனுதாரரால் சமர்ப்பிக்கப்பட்ட சொத் திற்கு பொருந்தாது என்பதனை வலியுறுத்தினார்.

மனுதாரரால் முன்வைக்கப்பட்ட நிருபணங்களுக்கு பதில் கூறும் வகையில், 11.10.2000 அன்று பதிவுத் துறையின் முதன்மை ஆய்வாளர் சென்னை அவர்களின், அனைத்து மாவட்ட பதிவாளர்க ளுக்கும் மற்றும் அனைத்து பதிவு செய்யும் துறையின் இணை முதன்மை ஆய்வாளர்களுக்கும், அனுப்பட்ட தெளிவாக்கங் களையும் மேற்கோள் காட்டி, இதுபோன்ற உரிமையின் விடுவிப்பின் மூலம் உடைமை யில் பகுக்கப்படாத பங்கினை ஒரு இணை உரிமையாளர் பெற்றால், அது இந்திய முத்திரை சட்டத்தின் சட்டப்பிரிவு 55C &யின் கீழேயல்லாமல் சட்டப்பிரிவு 55A வின் கீழ் வராது என்று அவர் சமர்ப்பித்தார். அவரை பொருத்த வரையில், ஒரு உயிலின் வழியாக கிடைக்கப்பெறும் உடைமையானது இந்திய முத்திரைச் சட்டத்தின் சட்டப்பிரிவு 55கி வின் கீழ் வராது எனவே மனுதாரர் முத்திரை வரியாக சந்தை மதிப்பின் மீது 13% செலுத்த வேண்டியவராகிறார். அவர் மேலும், சட்டத்தின் 55சி சட்டப்பிரிவு திருத்தியமைக்கப்பட்டு 2004&ன்  31ஆம் சட்டம் அறிமுகப்படுத்தப்படும் வரையில், ஒரு குறிப்பிட்ட சொத்தின் மீது இணை உரிமையாளர்களுக்கு இடையில் பொதுவான உரிமை இருக்குமானால், ஒவ்வொரு ரூ.100/&க்கும் ரூ.13% செலுத்துவதோ விடுவிப்பின் காரணமான அந்த உரிமையின் சந்தை மதிப்பின் ஒரு பகுதியை செலுத்துவதோ பொருந்தும் என்பதனை சமர்ப் பித்து, இந்த தெளிவாக்கங்கள் இவ்வழக்கில் கூற்றுகளுக்குப் பொருந்தாது என்று எடுத்துக் கூறினார்.

மேலும் அவரது வாதம் என்னவெனில், இணை உரிமையாளருக்கு சாதகமாக உள்ள விடுவிப்பு ஒப்பந்தத்தை பொருத்தவரையில், சட்டப் பிரிவு 55C யை பொருத்துவதில் சில குழப்பங்கள் நடந்துள்ளன. மேற்சொன்ன சட்டம், 16.12.2004 அன்று தான் மாற்றியமைக்கப்பட்டுள்ளது. எனவே, இந்த வழக்கில், ஆவணம் 18.12.2004 அன்று தான் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது. எனவே இதற்கு சந்தை மதிப்பின் மீது ரூ.13/& செலுத்த வேண்டும் என்பதே மேற்கூறிய காரணங்களினால் அவர், குறைகூறப்பட்ட உத்தரவில் எவ்வித சட்ட விரோதமான காரியமும் பிரகடனப்படுத்தப்படவில்லை என்று சமர்ப்பித்தார். பதிவுகளில் இருக்கும் அனைத்து காரியங்களும், இரு தரப்பினரின் வழக்கறிஞர்களின் வாதங்களை கேட்ட பிறகு கவனமாக பரிசீலனை செய்யப்பட்டது.

இவ்வழக்கின் கூறுகளை கவனிக்கும் முன்பு, இதில் உள்ள விதிகளை சுருக்கமாகக் காண்பது மிகவும் அவசியமாகும். இந்திய முத்திரை சட்டத்தின் 23A சட்டப்பிரிவு, ஒப்பந்தங்களாக விதிக்கப்படக் கூடிய, சந்தைக்குரிய கடனீட்டு ஆவணங் களின் அடமானத்துடன், தொடர்புடைய குறிப் பிட்ட சில சொத்துக்களை குறித்து பேசுகிறது. அது கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

கூற்று 23 கி ஒப்பந்தங்களாக விதிக்கப்படக்கூடிய சந்தைக்குரிய கடனீட்டு ஆவணங்களின் அடமானத்துடன் தொடர்புடைய குறிப்பிட்ட சில சொத்துக்கள்

(1) ஒரு உடைமை (கடனுறுதி பத்திரமோ அல்லது ரசீதோ அல்லது பொருள் மாற்றமோ இல்லாமல்) நிலுவையில் இருக்கும் அல்லது எதிர்காலத்திற்கான கடனுக்காகவோ அல்லது முன்னரே வாங்கிய பணத்திற்காகவோ அல்லது கடனாக பெறப்படக் கூடிய தொகைக்காகவோ பாதுகாப்புக்காக அல்லது சந்தைக்குரிய கடனீட்டு ஆவணமாக முன்னராக வைக்கப்பட டுக்கப்படுவது அல்லது) மீட்கப்படக்கூடியதாகவோ அல்லது முத்திரை யிடப்பட்ட மாற்றத்தை தகுதியுடையதாய் மாற்றி அதனை கடனீட்டு ஆவணமாகவோ அல்லது சந்தைக்குரிய கடனீட்டு ஆவணமாகவோ செய்யும் போது, அதன் வரி ஒரு ஒப்பந்தத்திற்காகவோ அல்லது ஒப்பந்தத்தின் பதிவுக்குறிப்பாக கருதப்பட்டு, மி திட்டத்தின் (5(வீ) ஆம் சட்டப்பிரிவு) கீழ் வரி விதிக்கப்படும்.

2) இது போன்ற எந்த ஒரு உடைமையை விடுவிப்பதற்கோ அல்லது வெளிக் கொணரவோ, கீழ் வரும் வரி மற்றும் கூற்றின் படியே விதிக்கப்படும்.

06.03.2000& அன்று முதல் நடப்பில் வந்த திருத்தியமைக்கப்பட்ட 2000ன் 1 சட்டம், திருத்துவ தற்கு முன்பு இந்திய முத்திரை சட்டத்தின் மி திட்டத் திற்கான 55A சட்டப்பிரிவாக இருந்தது. அது கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

4 கூற்று: 55A  எந்த ஒரு உடைமையின் (23கி பிரிவின் படி உள்ள விடுவிப்பாய் இல்லாமல்) விடுவிப்பின் போது, ஒரு நபர் இன்னொரு நபரின் மீதோ அல்லது எந்தவொரு குறிப்பிட்ட சொத்தின் மீது உள்ள கோரும் உரிமையை விட்டுக் கொடுப்பது மற்றும் கூற்று.

தமிழ்நாடு சட்டம் 2000&ன் படி வாக்கியம் மற்றும் கூற்றான: இரவல் பெயரில் நடவடிக்கை எடுக்கும் உரிமையை விடுவிப்பது மற்றும் கூற்று இந்த சட்டப்பிரிவின் உட்பிரிவுகளான ஙி,சி  மற்றும் சி &ல் பரிந்துரைக்கப்பட்ட விடுதலை ஒப்பந்தங்களுடன் தொடர்பு கொண்டு மாற்றியமைக்கப்பட்டது. மேலும், திருத்தியமைத்த பிறகு அது கீழ்வருமான இருந்தது.

4 கூற்று: 55A, எந்த ஒரு உடைமையின் விடுவிப்பும் (பகுதி 23A &வில் உள்ள விடுவிப்பு அல்லாமல்) அல்லது (இந்த சட்டத்தின் உட்பிரிவு களான B,C மற்றும் ஞி யின் படி உள்ள விடுவிப்பு) ஒரு நபர் மற்றொரு நபர் அல்லது ஒரு குறிப்பிட்ட சொத்திற்கு எதிராக உள்ள அவரது கோரும் உரிமையை விட்டுக் கொடுப்பதாகும் மற்றும் கூற்று.

06.03.2000 முதல் நடப்பில் வந்த தமிழ்நாடு சட்டம் 2000&னால் மாற்றப்பட்ட சட்டப்பிரிவு 55C மற்றும்  பின் வருமாறு:&

இணை உரிமையாளருக்கு சாதகமாக உரிமையை விட்டுக் கொடுப்பது அதாவது, எந்தவொரு உடைமையின் மீது தனக்குள்ள கோரும் உரிமையை ஒரு இணை உரிமையாளர் (குடும்ப உறுப்பினரல்லாத) மற்றொரு இணை உரிமையாளருக்கு சாதகமாக அவர்களிருவருக்கும் பொதுவான உரிமையுள்ள ஏதேனும் குறிப்பிட்ட ஒரு சொத்தின் மீது விட்டுக் கொடுப்பது)

(வீ) அது அசையா சொத்துடன் தொடர்புடையதாய் இருந்தால் ஒவ்வொரு ரூ.100க்கும் (பதிமூன்று ரூபாய்) செலுத்தப்பட வேண்டும். உடைமையுள்ள இடம் அல்லது அதன் இடத்தின் சந்தை மதிப்பை பொறுத்து இது செலுத்தப்படும். இந்நிலையில் உடைமையின் சென்னை பெருநகர திட்டமிடுதலின் சந்தை மதிப்பையோ அல்லது பெருநகர வளர்ச்சி திட்டத்தை பொருத்தோ இருக்க வேண்டும்.

மதுரை கோயமுத்தூர், சேலம் மற்றும் திருச்சி ராப்பள்ளி மற்றும் திருநெல்வேலி நகரம்.  வேறு இடத்தில் உடைமை இருந்தாலோ, பின் விடுவிப்பின் பொருளான இவ்வுடைமையின் சந்தை மதிப்பின் ஒரு பகுதிக்கு, ஒவ்வொரு ரூ.100&க்கும் (பன்னிரண்டு ரூபாய்) அசையா சொத்திற்கு செலுத்தப்பட வேண்டும்.

விடுவிப்பின் பொருளான வேறு ஏதாவது உடைமையாக இருந்தால் சொத்தின் ஒவ்வொரு ரூ.100&க்கும் ஏழு ரூபாய் அல்லது சந்தை மதிப்பின் ஒரு பகுதி செலுத்தப்பட வேண்டும்.

ஞி பங்குதாரரின் சார்பாக உரிமை விடுவிக்கப் பட்டால் ஒவ்வொரு ரூ.100/&க்கும் மூன்று ரூபாய் செலுத்தப்பட வேண்டும் அல்லது

(வீ) ஒரு அசையா சொத்தின் விடுவிப்பின் போது, அது அந்த பங்குதாரர் அல்லது பங்குதாரர்களின் சார்பாக உரிமை விடுவிக்கப்படும் போது, மற்ற பங்குதாரர்களின் விடுவிப்புக்கேற்றவாறு ஒவ்வொரு ரூ.100/&க்கும் (பதிமூன்று ரூபாய்) செலுத்தப்பட வேண்டும். ஒரு பகுதியான அல்லது சந்தை மதிப்பின் ஒரு பகுதியான அசையா சொத்தின் பங்குதாரர் களாக குடும்ப உறுப்பினர்கள் இருந்தால் இதுவே வரியாக நிர்ணயிக்கப்படும். அது அசையும் சொத்தாக இருந்தால், அது சென்னை பெருநகர திட்ட மிடுதல் பகுதியில் மற்றும் நகரப் பகுதியில் இடம் பெற்றிருக்க வேண்டும்.

இது போன்ற விடுவிப்பு பெருநகரங்களான மதுரை, கோயம்புத்தூர், சேலம், திருச்சிராப்பள்ளி மற்றும் திருநெல்வேலி நகரங்களில், குடும்ப உறுப்பி னரல்லாத பங்குதாரர்களிடையே ஏற்படும் போது,

 ஒவ்வொரு ரூ.100&க்கும் (பன்னிரண்டு ரூபாய்) செலுத்தப்பட வேண்டும் அல்லது வழக்கிற் குரிய அந்த அசையா சொத்து பிற இடங்களில் இருந்தால் சந்தை விலையின் ஒரு பகுதி செலுத்தப் பட வேண்டும்.

55C சட்டப்பிரிவில் இடம் பெற்றிருந்த வாக்கியம் மற்றும் கூற்றான Ôமற்றொரு இணை & உரிமையாளர்Õ மற்றும் கூற்று என்பது 2004ன்31&ஆம் சட்டத்தி னால் திருத்தியமைக்கப்பட்டு, மற்றொரு இணை உரிமையாளர் மற்றும் கூற்று என்னும் வாக்கியம் கீழ் வரும் வாக்கியம் மற்றும் கூற்றினால், மாற்றிய மைக்கப்பட்டது. அது 16.12.2004 முதல் நடப்பில் Ôகுடும்ப உறுப்பினரல்லாத மற்றொரு இணை உரிமையாளர் என மாற்றப்பட்டது எனவே, 2000ன் 1 ஆம் சட்டத்தின் அறிமுகத்தின் போது இருந்த 55C,  2004ன் 31 திருத்தியமைக்கப்பட்ட காரணத்தினால் 16.12.2004 முதல், இணை உரிமைத்துவம் என்பது தரப்பினர்களால் உருவாக்கப்படுவது. மேலும் இந்த உரிமை விற்பனை, அன்பளிப்பு, தீர்வு, பங்கீட்டளித்தல் போன்ற முறைகளின் மூலம் ஒன்றாக சேர்ந்து சம்பாதித்தல் அல்லது மற்றொருவர் சொத்தின் மீது ஏதேனும் ஒரு தரப்பினருக்கு கிடைக்கும் பகுக்கப் படாத பங்கினால் உருவாக்கப்படுவதாகும்.

இதனை விளக்க: ஒரு குடியிருப்பு பகுதி / அடுக்கு மாடி குடியிருப்புகள் போன்வற்றில் விற்பனை, அன்பளிப்பு போன்ற பல வழிகளில் ஏதேனும் ஒன்றின் மூலம் வாகனம் நிறுத்துமிடம், கிணறு மற்றும் நடைபாதை, தண்ணீர் சேமிக்கும் தொட்டி போன்வறற்றில் இணை உரிமைத்துவம் இருக்கலாம்.

இணை உரிமைத்துவ உரிமை, ஒன்றாக சேர்ந்து சுதந்தரித்த உடைமைகள் கூட்டமைப்பு உடைமைகள், பொதுவான விதிகளின் மூலம் விடுவிக்கப்பட்ட வைகள், மணவாழ்க்கை உரிமைகளை விடுவித் தல், வாடகை உரிமைகளை விடுவித்தல், அடமான உரிமைகளை விடுவித்தல் மற்றும் பிற விடுவித்தல்களின் மூலம் உருவாக்கப்படுகின்றது. நிச்சயமாக, முன்னரும் தற்போதும் உரிமைகள் உருவாக்கப்படுவ தற்திடையில் வித்தியாசம் இருக்கின்றது. அதனால் தான், 2000&ல் ஒரு உடைமையின் விடுவிப்பின் போது விதிக்கப்பட வேண்டிய முத்திரை வரியில் ஏதேனும் சந்தேகம் இருந்தால், அதற்கான தெளிவாக்கங்களை பதிவுச் செய்யும் துறையின் முதன்மை ஆய்வாளர் அனைத்து மாவட்ட பதிவாளர்களுக்கும் மற்றும் பதிவு துறையின் அனைத்து இணை முதன்மை ஆய்வாளர்களுக்கும் வழங்கியுள்ளார். அத்தெளிவாக்கங்கள் பின் வருமாறு:

4 கூற்று: இந்திய முத்திரை சட்டட்தின் சட்டப் பிரிவு 55A வின் கீழ் நிர்ணயிக்க வேண்டிய முத்திரை வரியை குறிப்பிட்டு வந்த கடிதம் தொடர்பான தெளிவாக்கங்கள் கீழே வருமாறு:

1899&ன் இந்திய முத்திரை சட்டத்தின் 55(C) சட்டப்பிரிவு இணை உரிமையாளர்களுக்கு இடையில் உள்ள விடுவிப்பைக் குறித்து கூறுகின்றது. இணை & உரிமைத்துவ உரிமை என்பது தரப்பினர் களினால் உருவாக்கப்படுவதாகும். இந்த உரிமை விற்பனை, அன்பளிப்பு, தீர்வு, பங்கீட்டளித்தல் போன்றவற்றினால், கையகப்படுத்தினாலோ அல்லது எந்த ஒரு தரப்பினர் மற்றொருவரின் சொத்தின் மீது பகுக்கப்படாத பங்கினை பெறுவதினாலோ உருவாக்கப்படுகின்றது. விடுவிப்பவர் மற்றும் ஆகிய இருவருமே உடைமையின் இணை உரிமையாளர் களாக இருக்க வேண்டும். ஒரு இணை உரிமையாளர் இன்னொரு இணை உரிமையாளருக்கு சாதகமாக தனது உரிமையை விட்டுக் கொடுப்பது 1899ன் இந்திய முத்திரைச் சட்டத்தின் 55சி சட்டப்பிரிவின் கீழ் வரும்.

3. 1899&ன் இந்திய முத்திரை சட்டத்தின் 55(A) சட்டப்பிரிவு, கூட்டமைப்பு உடைமைகள், ஒன்றாக இணைந்து சுதந்தரிக்கப்பட்ட உடைமைகள் முறைப்படி மரபுரிமையாக சுதந்தரிக்கப்பட்ட உடை மைகள், பொதுவான விதிகளின் அடிப்படையில் விடுவித்தல், மணவாழ்க்கை உரிமைகளை விடுவித்தல், வாடகை உரிமைகளை விடுவித்தல், பனைய உரிமைகளை விடுவித்தல் மற்றும் 55(B), (C) மற்றும் (D) ஆகிய சட்டப்பிரிவுகளின் கீழ் வராத விடுவிப்புகள் குறித்து தெரிவிக்கின்றது.

அனைத்து இணை முதன்மை ஆய்வாளர்களும் இத்தெளிவாக்கங்களை பெற்றுக் கொள்வதுடன் மேலும் அனைத்து மாவட்ட பதிவாளர்கள் மற்றும் மாவட்ட இணை பதிவாளர்களிடம் இருந்து அவர் களது ஒப்புதலைப் பெற வேண்டும் எனவும் கேட்டுக் கொள்ளப்பட்டார்.

ஒரு வேலை, ஒரு இணை உரிமையாளருக்கு சாதகமாக ஒரு உரிமை 2000ல்  சட்டத்தின் 55A சட்டப்பிரிவின்படி, விடுவிக்கப்பட்டிருந்தால், பின்பு இணை உரிமைத்துவ உரிமைகளை கையகப் படுத்துவது, அது எந்த வகையான கூற்றாக இருந்தாலும், விற்பனையோ, அன்பளிப்போ, தீர்வின் படியோ அல்லது பங்கீட்டளித்தலின்படியோ அல்லது ஏதேனும் ஒரு தரப்பினர் மற்றொரு இணை உரிமையாளரின் சொத்தில் பகுக்கப் படாத பங்கை பெறும்போதோ அல்லது கூட்டமைப்பு உரிமைகள், இணைந்த மரபுவழி உரிமை, கையகப்படுத்து வதன் மூலம் கிடைக்கும் உரிமைகள், மரபு வழிகள் உட்பட எதுவானாலும், பின் சென்னை, பதிவுச் செய்யும் துறையின் முதன்மை ஆய்வாளர் தெளிவாக்கத்தை இதற்காக வழங்கத் தேவையில்லை. எனவே, முதன்மையாக, சட்டம் 55A விடுவிப்பைக் குறித்து சொல்லும் போது, எந்த உடை மையானாலும், பகுதி 23கி வினால் வழங் கப்படும் விடுவிப்பைத் தவிர) அல்லது (இதே சட்டத்தின் உட்பிரிவுகள் B,C மற்றும் D விடுவிப்பைக் குறிக்காது) ஒரு நபர், மற்றொரு நபர் அல்லது ஏதேனும் குறிப்பிட்ட ஒரு உடைமையின் மீது தனக்குள் கோரும் உரிமையை விட்டுக் கொடுக்கும் போது, பின் சட்டம் 55A கூட்டமைப்பு உரிமை, சேர்ந்து சுதந்தரித்தல், மரபு வழி மூலம் கிடைக்கப்பெறும் உடைமைகள் ஆகியவற்றின் மூலம் கிடைக்கும் இணை & உரிமைத்துவ உரிமையை விடுவிப்பதை மட்டுமே குறிக்கும். விற்பனை, தீர்வை போன்றவை அல்லது ஏதேனும் ஒரு தரப்பினர் மற்றவர் உடைமையின் மீது பகுக்கப்படாத உரிமையைப் பெறும் போது மட்டும் கிடைக்கக் கூடிய மற்றும் விடுவிக்கக்கூடிய இணை உரிமைத்துவ உரிமையின் மீது மட்டுமே 55C பிரிவு பொருந்தும் , 55A சட்டப்பிரிவை மேலும் பரிசீலனை செய்யும் போது, அரசாங்கம், வரியை அதிகபட்சமாக ரூ.10,000/&த்தை சந்தை விலையாகக் கொண்ட உடைமைகளுக்கு ஒரு சதவீதமாகக் குறைப்பதற்கும், மேலும் தீர்வு விடுவிப்பு, பிரிவினை மற்றும் பிரிவினையை தீர்ப்பது போன்றவற்றுக்காகவும், ஒரு உடைமையின் மாற்றம் குடும்பத்திற்குள் ஏற்படும் போதும், அதற்காக சட்டப்பிரிவு 55C யை திருத்தியமைத்து வாக்கியம் மற்றும் கூற்றான, குடும்ப உறுப்பினரல்லாத மற்றொரு இணை & உரிமையாளர் என்பதை சேர்த்து, மேலும் இது போன்ற இணை உரிமையாளருக்கு சாதகமான விடுவிப்பு ஏதேனும் அசையா உடைமையுடன் தொடர்புடையதாக இருந்து, அவ்வுடைமை சென்னை பெருநகர திட்டமிடும் பகுதிக்குள் மற்றும் பெருநகரங்களான மதுரை, கோயமுத்தூர், சேலம், திருச்சிராப்பள்ளி மற்றும் திருநெல்வேலி நகருக்குள் இருந்தால், அது மதிப்பிடப்பட்டு, விடுவிப்புக்குட்பட்ட அவ்வுடைமையின் சந்தை மதிப்பின் மீது ரூ.13/ என வரி நிர்ணயிக்கப்படும்.

01.03.1999 அன்று அரசாங்கக் கடிதமான கடிதம் எண் 4860/யி1ல் வியாபார வரிகள் (யி) வரிச் செயலகம், சென்னை, குடும்பம் என்பது, சகோதரர்கள் மற்றும் சகோதரிகளை உள்ளடக்கியது எனக் கூறுகின்றது. எனவே, சகோதரர்கள் மற்றும் சகோதரிகளுக்கிடையே ஒரு உடைமை விடுவிக்கப்பட்டால் அவர்களது உறவுமுறைய கருத்தில் கொண்டு முத்திரை வரியில் ஒரு தள்ளுபடி வழங்கப்படுகின்றது. அவர்கள் குடும்ப உறுப்பினர்கள் என்பதால் இது வழங்கப்படுகின்றது. சகோதரர்கள் மற்றும் சகோதரி களுக்கு சாதகமாக வழங்கப்படும் உடைமையின் பிரிவினை, தீர்வு மற்றும் விடுவிப்பு ஆகியவை இந¢திய முத்திரை சட்டத்தின் 58&ஆம் சட்டப்பிரிவின் கீழ் ஒரு குடும்பத்தின் உறுப்பினருக்கு சாதகமாக வழங்கப்படுவது என விளக்கப்படுகிறது. 11.10.2000 அன்று, அனைத்து மாவட்ட பதிவாளர்களுக்கும் மற்றும் பதிவு செய்யும் துறையின் அனைத்து இணை முதன்மை ஆய்வாளர்களுக்கும், முதன்மை ஆய்வாளர் தனது கடிதத்தில் தெரிவித்துள்ள தெளிவாக்கத்தின் மூலம், சட்டப்பிரிவு 55(A) மற்றும் 55(A)1 ன் கீழ் விடுவிப்பு என்பது குடும்ப உறுப்பினர்களுக்கிடையே இருந்தால், விதிக்கப்பட வேண்டிய முத்திரை வரி ஒரு ரூபாய் அல்லது அதிகபட்சமாக ரூ.10,000/த்தை சந்தை மதிப்பாகக் கொண்ட உடைமைக்கு ஒவ்வொரு 100 பகுதிக்கும் என செலுத்தப்பட வேண்டும் என்பது நடப்பில் வந்தது.

மேற்கூறியவற்றில் இருந்து, சட்டப்பிரிவு 55கி வும், சென்னை, பதிவு செய்யும் துறையின் முதன்மை ஆய்வாளர் வழங்கிய தெளிவாக்கங்கள் தெளிவாக இரண்டு வேறு முறைகளான இணைந்த முறையில் உடைமையை அனுபவித்தல் மற்றும் மரபுவழியில் உரிமையை பெறுதல் மூலம் கிடைக்கக் கூடிய இணை உரிமைத்துவம் குறித்துத் தெளிவாக பேசு கின்றன. மற்றும் இது   குறிப்பாக, விற்பனை, தீர்வு மற்றும் பங்கீட்டளித்தல் போன்வறற்றின் மூலம் கிடைக்கும் இணை  உரிமைத்துவ உரிமைகளை தவிர்க்கின்றது.

இந்த வழக்கில், உடைமைகளான சுமார் 1126 ச.அடியுள்ள S.NO.2487 வார்டு எண்.2 மற்றும் புதிய வார்டு கி , புதிய பிளாக் 13 பழைய தி.ஷி. எண¢.1135, புதிய நகர மதிப்பீடு எண்.98, திருச்சியில் உள்ள 840 ச.அடி யுள்ள இவ்விரண்டும் மனுதாரரின் தாயாரால் முறையே 1980 மற்றும் 1995 ஆகிய வருடங்களில் வாங்கப்பட்டது மற்றும் அதன் பிறகு அவர் ஒரு உயிலையும் அவரது வாக்குமூலத்தையும் நடை முறைப்படுத்தி 10.6.1995 அன்று இரண்டு விற்பனை ஒப்பந்தங்களின் கீழ் அவரால் வாங்கப்பட்டஇரண்டுஉடைமைகளையும் மனுதாரர் மற்றும் அவரது சகோதரர் நாக ராஜன், ஆகியோர் பெயருக்கு மாற்றி கொடுத்தார். மேலும் மனுதாரரின் தாயார் 18.08. 1995 அன்று காலமானார்.

பின்பு அந்த உயில் நடை முறைக்கு வந்து அவர்களிரு வரும் இணை உரிமையாளர்களானார்கள் என்பது தெரிகின்றது. மனுதாரரின் சகோதரர் தனது பகுக்கப்படாத பாதி உரிமையை மனுதாரருக்கு ரூ.50,000&க்கு விட்டுக் கொடுத்தார். மற்றும் அதனை செயல்படுத்த ஒரு விடுவிப்பு ஒப்பந்தத்தை உருவாக்கினார். அதுவே ஸ்ரீரங்கத்தின் இணை பதிவாளர் முன்பு பதிவு செய்த நாளான 12.11.2002 அன்று சமர்ப்பிக்கப்பட்டது. எனவே, மனுதாரரும் அவ ரது சகோதரருமான நாகராஜும் விருப்ப ஆவண முறையில் மரபு வழியாக இணை உரிமைத்துவத்தை பெற்றனர் என்பதில் எந்தவித சந்தேகமும் இல்லை. மேலும் சொல்வதானால், இணை உரிமைத்து வம் ஒரு சுதந்திரத்திற்கான உயிலின் மூலம் பெறப்பட்டுள்ளது. இந்த மரபுவழி யின் மூலம் உண்டாக்கப்பட்ட இணை உரிமைத்துவ உரிமையை விட்டுக் கொடுப்பது 55A  சட்டப் பிரிவின் கீழ் வருமேயல்லாமல் சட்டத்தின் 55C பிரிவின் கீழ் வராது.

மேற்கூறிய வாதங்களை வைத்துப் பார்க்கும் போது, இந்த நீதிமன்றம், குறைக்கூறப்பட்ட உத்தரவு சென்னை, பதிவு துறையின் முதன்மை ஆய்வாளரால் 10.10.2000 அன்று வழங்கப்பட்ட தெளிவாக்கத்தினோடு தொடர்புடையதல்ல என்று கருதுகின்றது. எனவே, சிறப்பு அரசு தரப்பு வழக்கறிஞரின் வாதமான, இணை உரிமைத்துவ உரிமை மேற்கூறிய எந்தவொரு வகையில் கையகப்படுத்தப்பட்டோ, உருவாக்கப்பட்டு இருந்தாலோ மேலும் அவர்கள் இருவருக்கும் பொதுவான உரிமையுள்ளவற்றின் மீது விடுவிப்பை ஒரு இணை உரிமையாளர் மற்றவருக்கு சாதகமாக குறிப்பிட்ட உடைமையின் மீது வழங்கினாலோ அதற்கான முத்திரை வரி சுந்தை மதிப்பின் மீது ரூ.13/& என விதிக்க வேண்டும் என்பதை ஏற்றுக் கொள்ளாது. மேலும் அவரது வாதமான, 2004&ல் தான் திருத்தியமைக்கப்பட் டது. அமலுக்கு வந்தது. எனவே, 12.11.2002 அன்று பதிவு செய்வதற்காக சமர்ப் பிக்கப்பட்ட ஆவணம், முத் திரை சட்டத்தின் 55C சட்டப்பிரிவின்படி, வரி விதிக்கப்பட அனுமதிக்க வேண்டும் என்பதும் ஏற்றுக் கொள்ள முடியாததாகும்.

மேற்சொன்ன வாதங்களைவைத்துப் பார்க்கையில், குறைகூறப்பட்ட உத்தரவு ஒத்தி வைக்கப்படுகின்றது மற்றும் ஆவண கேட்பு மனு ஏற்றுக் கொள்ளப்பட்டு பிரதிவாதிகள், இரண்டாம் பிரதிவாதி யின் கோப்பில் இருந்து ஆவண எண்.174/02வை வெளியிட வேண்டும் என உத்தரவிடப்படுகின்றது. கட்டணம் ஏதுமில்லை. எனவே, இதனுடன் தொடர்புடைய அனைத்து பிற மனுக்களும் தள்ளுபடி செய்யப்படுகின்றன.

1 comment:

  1. உயர் நீதிமன்றத்தின் உத்தரவு அற்புதமாக தமிழாக்கம் செய்யப் பட்டுள்ளது.
    அருமை.
    ஆசிரியருக்கு (மொழி பெயர்த்த வக்கீலுக்கு) வாழ்த்துக்கள்.

    அ.ஸ்ரீ விஜயன்

    ReplyDelete