Friday, 26 October 2012

SH கப்பாடியா, ஒரு சகாப்தம்


இந்தியாவின் மிகப் பெரிய CJI அல்லது தவறவிடப்பட்ட வாய்ப்பு? எப்படி நீங்கள் இந்த சகாப்தத்தை நினைவில் வைத்துக் கொள்வீர்கள்.

இந்தியாவின் தலைமை நீதிபதியாக ஓய்வு  பெற்றபின் சரோஷ் ஹோமி கப்பாடியா. தனது சூழ்நிலைகளாலே விளக்கப்பட்டதும் சூழப்பட்டதுமான சகாப்தத்தை விட்டுச் சென்றார்.


உதாரணமாக, கப்பாடியாவிற்கு முன் இருந்த K.G.பாலகிருஷ்ணன் மூன்று வருடத்திற்கும் மேலாக CJI ஆசனத்தில் இருந்துகுறிப்பிடத்தக்க விமர்சனங் களுக்கும் தர்க்கங்களுக்கும் உள் ளாகி, மத்திய புலனாய்வுத் துறையின் (CBI) விசாரணைக்கும் உள்ளானார். அதற்கு மாறாக, கப்பா டியா அனைத்து விதத்திலும் குற்ற மற்றவராக இருந்தார்.

ஒரு மூதரிந்த வழக்கறிஞர், "கப்பாடியாவை பற்றி கூறும்  போது காரியங்கள் மிகவும் மோசமாக இருந்த போதும் கூட அவரின் மதிப்பு சந்தேகத்திற்கு இடமின்றி இருந்தது" என்றார்.

கப்பாடியாவின் மதிப்பைப் போலவே அவரது தனிப்பட்ட வரலாறும் இந்திய மக்களுக்கென்று எழுதப்பட்ட ஒரு சகாப்தமாகவே இருந்தது.

இந்தியாவின் சுதந்திரத்திற்கு பிறகு மிகவும் ஏழ்மையான பார்சிக் குடும்பத்தில் பிறந்த இவர், பின்பு பம்பாயில் ஒரு நிறுவனத்தில் பியூன் தகுதியுடைய வேலையை பார்த்தார். அவர் சட்டத்தை விரும்பிக் கற்றுக் கொண்டார். மதிய வேளைகளில் வறுத்த கட லையை கொரித்துக் கொண்டே பம்பாய் உயர்நீதிமன்றத்தின் மும்பை ஃபுளோரா, ஃபுவுன்டெயின் அருகே அமர்ந்திருப்பார். கொஞ்சம் கொஞ்சமாய் மனித தன்மையற்ற கடின வேலைகள் மூலம், கடந்த இரண்டு வருடங் களில் இந்தியாவின் மிகவும் சக்தி வாய்ந்த மனிதர்களுள் ஒருவராக உயர்ந்தார். இந்த சம்பவம் கடந்த மாதத்தின், ஃபோர்ப்ஸ் நாளிதழில் அழகாகச் சொல்லப்பட்டு உள்ளது.

ஓய்விற்கு பிறகு, கப் பாடியா, மற்ற முன்னாள் உயர் நீதிமன்றத்தின் நீதிபதிகள் நியமிக் கப்பட்டதைப் போல எந்த அரசாங்க பதவியிலும் அமர்த்தப்பட எத்தனிக்கவில்லை. என சில உச்சநீதிமன்ற வழக்கறிஞர்கள் கூறுகின்றனர். அதற்கு பதிலாக, அவர் மும்பைக்குத் திரும்ப வந்து தனது பணிகளை மத்தியஸ்தராக தொடரப் போவதாக பலரும் நம்புகின் றனர். இது மிகவும் நல்ல ஒரு தொழில் முறை, முக்கியமாக ஓய்வு பெற்ற நீதிபதி களுக்கு மேலும் இவரைப் போன்ற திற மையினைக் கொண்டவர்களுக்கும் இது பொருத்தமானதாகும்.

கப்பாடியாவின் பதவி உயர்வின் நேரம் மிகவும் சரியானதாகும். அது இந்தியாவின் தாராள மயமாக்களுக்கு பிறகான மாற்றத்தின் காலமான அறிவுடைமை மற்றும் உரிமத்தின் சட்டத்தில் இருந்து மிகவும் அதிகமான மேற்கத்திய ஆளுமையுள்ள பொருளாதாரத்திற்கு மாறிய காலமாகும். இது போன்ற முறையில், சட்டத்தின் ஆளுமை, நீதிக்கான லாபத்தின் தன்மையில் இருந்து, பொருளாதார வளர்ச்சியின் கட்டுப்படுத்தும் விசையானது. இதற்கு உச்ச நீதிமன்றமும் அதன் நீதிபதிகளுமே தலைவர்களாய இருப்பார்கள்.

சில வழக்குகளான 2நி வழக்குகளின் போதும், வோடபோன் மற்றும் சஹாரா போன்ற வழக்குகளின் போதும், கப்பாடியாவின் நாட்களில் இருந்த உச்சநீதிமன்றம், அரசாங்கம் மற்றும் இந்திய நிறுவனங்கள் அனைத்திற்கும், என்ன இழப்புகள் ஏற்பட்டாலும், கேள்விக்குரிய தரப்பினர் யாராக இருந்தாலும்  அல்லது எதிர்காலத்தில் எழுதக்கூடிய மிரட்டல்கள், குழப்பங்கள் என எதைக் குறித்தும் கவலைப்படாமல் உச்சநீதிமன்றம் அனைத்து சட்டதிட்டங்களையும் முன் வைத்தது.

கடந்த வாரம் நடந்த பொருளாதார வளர்ச்சி மற்றும் பெருவணிக சூழ்நிலை என்னும் கருத்தரங்கில், அவருக்கு அடுத்து பதவியேற்ற தலைமை நீதிபதி அல்டமாஸ் கபீர் மற்றும் பிரதமர் மன்மோகன் சிங் அவர்களின் முன்னிலையில் பல காரியங்களை உறுதி செய்தார்.

கப்பாடியா சட்டங்களின் விதிகள் மட்டுமே, குறைந்தபட்ச நியாயத்தின் அளவையும், பொருளாதார வளர்ச்சியின் ஒரே பெரிய உந்துவிசையாக முடியும்.

 இந்து நாளிதழ் படி
அரசாங்கம் முந்தைய நாளில், பெரு அங்காடிகளிலும் மற்றும் வான்வழி பயண துறையின் பொருளாதார முன்னேற்றங்களிலும் நேரடி வெளிநாட்டு முதலீடுகளை தாராளமயமாக்குதலை அறிவித்திருந்தது. இது பாதிப்புகளையும், பேரழிவுகளையும் தவிர்ப்பதோடு, முதலீட்டையும், வேலை வாய்ப்பின் வளர்ச்சிகளையும் ஊக்கப்படுத்தும். கப்பாடியா இதனை பெரிதும் பாராட்டினார்.

இது நீதிமன்றத்திற்கு வெளியே கப்பாடியாவின் சிந்தனைக்கப்பால் உண்டான அரிய பொது பேச்சாகும். அதுவும் நீதிபதிப் பதவியைப் பற்றி மிகவும் ஊடகங்களில் பேச கூச்சப்படும் சியிமி சொன்னது மிகவும் ஆச்சரிய மாக இருந்தது. (ஆனால் பொதுவாக அவர் தனக்குத் தானே ஊடகங்களிடம் பேட்டி கொடுக்க் கூடாது என்று விதித்துக் கொண்ட கட்டுப்பாடு. ஊடகங் களை சந்திக்க கூச்சம் என தவறாக விளக்கப்
பட்டது.) அவருடைய அபிப்ராயங்களைக் கேட்டு வந்த மின்னஞ்சல்களுக்கு அவரது அலுவலகத்தினர் பதிலளிக்கவில்லை.

ஆனால், புதிய உச்சநீதிமன்றத்திற்கான கோட்பாடு கப்பாடியாவின் நீதிமன்றத்தில் தெளிவாகத் தெரிந்தது.
2012, செப்ட்ம்பர் 6 அன்று, கப்பாடியாவினால் தலைமை ஏற்று நடத்தப்பட்ட, மத்தியஸ்த சட்டத்தின் மீதான ஐந்து நீதிபதிகளைக் கொண்ட சட்டங்கள் பெஞ்சின் முடிவு, வெகு காலமாய் அந்நிய முதலீட்டாளர்கள் பயப்பட்ட பாட்டியா சர்வதேச வழக்கு முடிவுக்கு கொண்டு வரப்பட்டது. அந்நிய முதலீட்டாளர்களும் நிறுவனங்களும் இந்திய நிறுவனங்களுடன் மத்தியஸ்த முறையில் பிரச்சினைகளை தீர்த்துக் கொள்ள பயப்பட்டனர். ஏனெனில் இந்திய நீதிமன்றங்கள் அவர்களது தலையீட்டினால் மத்தியஸ்தத்தை வெகுநாள் ந¦ட்டித்து விடுவார்கள்.

அவரது வோடஃபோனின் வருமான வரி தீர்ப்பில், கப்பாடியா அவரது கோட்பாட்டை இன்னும் தெளிவாகத் தெரிவித்தார். நேரடி அந்நிய முதலீடு அதிக பலமுள்ள நிர்வாகம் அமைப்பினைக் கொண்ட இடத்தில் போய் செல்கிறது. இது சட்டம் இயற்றுதலையும், எவ்வளவு சிறப்பாக சட்டமுறை செயல்படுகின்றது என்பதையும் உள்ளடக்கியதாகும்.

கப்பாடியாவின் நேரம் மட்டுமல்ல, அவரது ஆர்வங்களுக்கேற்றாற் போல அவரது ராசி அமைந்திருந்தது என்பதற்கு இவ்வழக்கு இன்னொரு உதாரணமாகும். கப்பாடியாவின் வரி சட்ட நிபுணத்துவத்திற்கு ஈடாக இந்திய நடுவர் குழுவில் எவரும் இல்லை எனப் பொதுவாக ஒப்புக் கொள்ளப்படுகின்றது.

அரசாங்க சட்டத்தின் தற்போதைய மாற்றங்களை சகிக்க இயலாமல், தீர்ப்பை மாற்றக் கோரி தொடரப்பட்ட வோடபோனின் வழக்கில் மில்லியன் கணக்கில் அமெரிக்க டாலர்கள் ஆபத்தில் இருந்தன. அவை இன்னொரு அந்நிய நிறுவனத்திடம் இழுக்கப்படலாம். அல்லது அரசாங்க கஜானாவினுள் வந்து சேரலாம். மற்றும் வெகு சீக்கிரமே இவ்வழக்கு, சமீப காலங்களிலேயே நடந்த இந்தியாவின் மிக முக்கியமான அந்நிய முதலீடு தொடர்பான பிரச்சினை ஆனது. ஆனால், இப்போது பிரமிக்கும் பல குடிமக்களுக்கு, இம்மாதிரி வழக்கில் ஒரு மனிதரால் தீர்ப்பு சொல்ல இயலுமா என்பதில் சந்தேகம் இருந்திருந்ததில் ஆச்சரியமில்லை.

M.L ஷர்மா என்கிற ஒரு வழக்கறிஞர், மிகவும் கடினமான ஒரு தொடர்பை வழக்கில் கொண்டு வர நினைத்தார். அது கப்பாடியாவுக்கும் அவரது மகனுக்கும், ஏனெனில் அவரது மகன் எர்னஸ்ட்&யங் என்னும் நிறுவனத்தில், அந்நிறுவனத்தின் வேறு துறை வோடபோன் ஹாட்சின்சன் ஒப்பந்தத்தில் பணி புரிந்த ஒரு வருடம் கழித்து அவர் வேலைக்கு சேர்ந்தார். இதுப் போன்ற ஒரு ஆதாரமற்ற கோரிக்கையினால் ஷர்மா வேறு இரண்டு உச்சநீதிமன்ற நீதிபதி களால் ரூ.50,000/ அபராதமாக விதிக்கப்பட்டார்.

ஆனால், மறுபடியும் கப்பாடியா நியாயமானவர் அல்ல என நிரூபிக்க இரண்டாவது முறை முயற்சித்தார். இன்னொரு வழக்கில் அதை முயன்றார். ஏனெனில் கப்பாடியாவின் மருமகன் டாடா குழும நிறுவனத்துடன் பணிபுரிந்தார். என்னதான் ஆதாரமற்றதாய் இருந்தாலும் வேறு சில நீதிபதிகளாய் இருந்தால் இது போன்ற தாக்குதல்களில் ஆடிப் போய் இருப்பார்கள். ஆனால் கப்பாடியா அப்படிப்பட்டவரல்ல.

நீதித் துறையில் அவர் பல வரி தீர்ப்புகளுக்காக நினைவில் வைக்கப்படலாம். ஆனால், பொருளா தாரத்தை தவிர, கப்பாடியா, கல்வி சட்டத்திற்கான சட்டத்தின் மாறுதலின் உரிமை என்னும் வழக் கிலும் அவர் தீர்ப்பை அளித்தார். முழுவதும் சாதகமாக அல்ல, இதற்கான நீதிபதிகள் குழு நீதிமன்ற
வழக்குகளில் ஊடகங்கள் அறிவிப்பைக் கொடுப் பதைக் குறித்த வழக்கின் போது, அவர்கள் பத்திரிகை
யாளர்களிடம் இருந்து மட்டுமல்ல பல வழக்கறி ஞர்களிடம் இருந்தும் கேள்வி தாக்குதலை எதிர் கொண்டனர்.

ஏனெனில் சட்டத்தை தீர்ப்பது என்பது இந்திய தலைமை நீதிபதியின் வேலையில் பாதி மட்டுமே, அவர் இந்தியாவின் மிக அதிகமாக பரந்து விரிந்துள்ள நீதிமன்ற முறைகளில் இருந்து வரும் 3 கோடிக்கும் அதிகமான நிலுவையில் உள்ள வழக்குகளையும் அதனுடன் நிர்வாகம் மற்றும் வரலாற்று செயலற்ற தன்மைகளையும் நிர்வாகிக்க வேண்டிய பெரும் பொறுப்பு அவரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

சமீபத்திய சட்டப்பூர்வமான பணிகள்:

பாரதி ரியல்டி ஹோல்டிங்க்ஸ் லிமிடெட்: உதவி மேலாளர் & சட்டப்பூர்வமானது & குர்கவுன் (2 - 3 வருடங்கள் PQE) ரியல் எஸ்டேட் சட்டங்கள்.

ஃபிளேரம் டெக்னாலஜிஸ் : உதவி மேலாளர் & சட்டப்பூர்வமானது (3 - 5 வருடங்கள் PQE  ரியல் எஸ்டேட்டில் மிறி வழக்கு, அமைப்பு, ஒப்பந்தத்தை சரிபார்த்தல், போன்றவை.

ஃபிளாட் வோர்ல்ட் சல்யூஷன்ஸ் & சட்டப்பூர்வ அதிகாரி & பெங்களூர் (2.5 வருடங்கள் PQE)

இணையதள ஜனநாயக திட்டம் : திட்ட அதிகாரி & இளையதள ஜனநாயக திட்டம் & டெல்லி / மும்பை 3 - 5 வருடங்கள் றினிணி இந்திய பார் கவுன்சில்: இந்திய பார் கவுன்சிலில் உள்ள காலி பணியிடங்கள் புதுடெல்லி.

MDP & பார்ட்னர்ஸ் (மும்பை & உதவி அலுவலர் & ரழக்கு, மத்தியஸ்தம், பெரு வணிகச் சட்டங்கள் (2 - 3 வருடங்கள் PQE)

சிர் அமித் லா சேம்பர்ஸ் & ஜெய்ப்பூரில் தேவைப் படும் சட்ட உதவியாளர்கள் சட்ட நிறுவனம் அடிப்படையிலான வழக்கு.

நிலுவையில் இருப்பவை குறித்த கணக்கின்படி, கப்பாடியா வெற்றி பெறவில்லை. 2010, ஏப்ரல் மாதத்தில் அவர் பதவியேற்ற போது உச்சநீதிமன்றத்தில் மொத்தமாக 55,018 வழக்குகள் நிலுவையில் இருந்தன. இது ஆகஸ்ட் 2012 வரை 16 % அதிகரித்தது. எனவே, 63,749 வழக்குகள் நிலுவையில் இருந்தன. அவற்றுள் 42, 583 வழக்குகள் ஒரு வருடத்திற்கும் மேலாக புத்தகத்தில் இருந்தன. கப்பாடியாவின் நேரடி கட்டுப்பாட்டிற்குள் வராத கீழ் நீதிமன்றங்களில் கூட வழக்கின் எண்ணிக்கைகள் அதிகரித்தன.

ஒரு முதிர்ந்த வழக்கறிஞர், இதனை முற்றிலுமாக வெளியேறும் ஒரு சியிமி யின் மீது சுமத்துவது நியாயமற்றதாகும் எனக் கோரினார். எனினும், இது எந்த தலைமை நீதிபதியினாலும் தீர்க்க இயலாது, எனக்கூறினார். ஏனெனில் இந்த முறையிலேயே தவறு இருக்கின்றது. எந்தவொரு வழக்கும் விஷேசித்த விடுப்பு மனுவின் (ஷிறிலி) மூலம் உச்சநீதிமன்றத்தை அடையலாம். மேலும் அவற்றுக்கு என எந்தவொரு வழக்கு நாளும் தீர்மானிக்கப்படவில்லை. கீழ் நீதிமன்றங்கள் நடைமுறையில் நாளுக்கு நாள் உயர் நீதிமன்றங்களில் மேற்பார்வைக் கீழ் வருகிறார்கள்.

கப்பாடியா மக்களுக்குள்ளும் காரியங்களுக்குள்ளும் சர்வ சாதாரணமாக பயத்தை புகுத்தி விடுவார். ஆனால், இது மிகப் பெரிய நாடு மற்றும் அநேக நீதிமன்றங்கள் இருக்கின்றன. இந்திய தலைமை நீதிபதி உண்மையில் எவ்வளவு தான் செய்ய முடியும்? என ஒரு வழக்கறிஞர் கேட்டார்.

கப்பாடியா உண்மையில் தனது எல்லைக்குள் ஒழுக்கத்தை வலியுறுத்தினார். இதனை வழக்கறிஞர் தனது நீதிமன்றத்திற்குள் தங்களது திட்டமிட்ட வரிசையில் இருந்து தவறி வேறு வழக்குகளுக்குத் தாவுவதை தடை செய்தார்.

கப்பாடியாவின் காலத்தின் போது, உச்சநீதிமன்ற கஜானாவில் ஊழல் குறிப்பிடும்படியாகக் குறைந்திருந்தது. பல வழக்கறிஞரர்களின் கூற்றுப்படி, Ôமுன்னர் யாராவது ஒரு குறிப்பிட்ட நீதிபதிகள் குழுவின் முன்பு முயற்சித்து காரியங்களை முடிக்க லாம். அல்லது கோப்புகள் தொலைந்து போகலாம். அல்லது காரியங்கள் தாமதமாகலாம் என்று ஒருவர் கூறினார்.

அடுத்த நாளுக்கான வழக்குகளை நன்கு ஆராய்ந்து, அதன் காரியங்களில் கவனம் செலுத்து வதன் மூலமும், நடத்தை மற்றும் கடின உழைப்பைத் துணையாகக் கொண்டு கப்பாடியா இவற்றை சரி செய்தார். கப்பாடியாவின் சிறந்த நிர்வாகத் திறமைக் குறித்துச் சொல்லுகையில், ஷிசிகிளிஸிகி &வின் தலைவர் கடிதத்தில் இவ்வாறு குறிப்பிட்டார் ÔÔகனம் பொருந்திய நீதிபதி அவர்களுக்கு எவ்வாறு, ஓய்வுபெறும் நீதிபதிகளுக்கான விருந்து உபசரிப்பு முடிந்தவுடன் தேநீர் அருந்தக்கூட நேரம் இருக்கவில்லை என்பதை உறுப்பினர்கள் மிகுந்த வருத்தத்துடனும், கவனித்து அதை மரியாதையுடன் உங்களுக்குத் தெரிவிக்க விரும்புகின்றோம் மரியாதையுடன் நாங்கள் கருதுவது என்னவெனில் இதுப் போன்ற நிகழ்வுகளின் போது சுதந்திரமாகக் கலந்துரையாடவும், ஆலோசனைகளை நிறுவனத்தின் நலனுக்காக பகிர்ந்து கொள்ளவும் கிடைக்கும் நேரத்தை தவிர்க்க வேண்டாம் எனத் தெரிவித்திருந்தார்.

பல வழக்கறிஞர்களின் கூற்றுப்படி, முதிர்ந்த நீதிபதிகளின் குழு மே மாதத்தில் இருந்து உச்சநீதிமன்ற நீதிபதி குழுவிற்கு வரும் புதிய நியமனங்களில் எதையுமே ஒத்துக் கொள்ளத் தவறியுள்ளனர். தற்போது திரு.தீபக் வர்மா என்னும் நீதிபதியின் ஓய்வோடு, கப்பாடியாவின் ஓய்விற்கு பிறகு உச்சநீதிமன்ற நீதிபதிகளின் எண்ணிக்கை 25 ஆக குறைந¢துவிடும். இது அனுமதிக்கப்பட்ட 31&விட 6 குறைவாகும். 2011&ன் ஆரம்பத்தில் 4 பேர் தான் குறைவாக இருந்தனர்.

871 நாட்கள் அல்லது இரண்டு வருடங்கள் மற்றும் நான்கு மாதங்கள் என, கப்பாடியா இந்தியாவின் தற்போதைய வரலாற்றில் மிக நீளமான பதவி காலத்தை, இந்தியாவின் நீதித்துறை தலைவராகப் பெற்று இருந்து வந்தார். 27 வருடங்களில் மூன்று பேர் மட்டுமே இவ்வளவு நாட்கள் பதவி வகித் துள்ளனர். எனினும், நீதித்துறை நியமனங்களில் உள்ள நுணுக்கங்கள் மற்றும் ஓய்வு முறையின் காரணாக, கப்பாடியாவிற்கு அடுத்து பதவியேற்ற நீதிபதிகள் கபீர் மற்றும்  றி.சதாசிவம் ஆகியோர் நாட்டின் நீதித்துறையை சில காலங்களுக்கு மட்டுமே பதவி வகிக்க திட்டமிடப்பட்டிருந்தனர். இது தங்களுக்கென்று ஒரு தாக்கத்தை ஏற்படுத்தப்போதுமான கால அளவு கிடையாது.

ஒரு வழக்கறிஞர் கூறினார், டெல்லி உயர்நீதிமன்றம் செய்ததை போல கப்பாடியா உச்சநீதிமன்றத்தை கணினிமயமாக்கி முழுவதுமாக மின்னியல் நீதிமன்றத்தை உருவாக்கியிருக்க வேண்டும். எனினும் மற்றொரு வழக்கறிஞர் கூறுகையில், இதற்கு குறைந்தது பத்தாண்டுகளாவது தேவைப்படும். ஏனெனில் பழைய தலைமுறையின் நீதிபதிகள் நீதிமன்றத்தின் தகவல் தொழில்நுட்பத்தை உபயோகிப்பதில் திருப்தி அடைந்திருக்க மாட்டார்கள். கபீர் ஆனால் இருவரின் கூற்றையும் தவறு என நிரூபிக்கலாம்.

உச்சநீதிமன்றத்தின் நீதிபதிகளின் குறுகிய காலங்கள், நிறுவனத்திற்குட்பட்ட பிரச்சினையாகும். மற்றும் இது ஓய்வு பெறும் வயதை அதிகரித்து தான் தீர்வு செய்ய முடியும். ஆனால், அதிலும் கப்பாடியாவை விட நிர்வாகத் திறன் குறைந்தவராக இருந்தால், அவரால், குழப்பம் மிகுந்த இத்துரையை நீண்ட காலம் நடத்த இயலுமா என்னும் ஆபத்தும் உள்ளது.

சந்தேகமேயில்லாமல், கப்பாடியா பெரும் மதிப்பு வாய்ந்தவராகத் திகழ்கிறார். மேலும் முதிர்ந்த வழக்கறிஞர்களும் மற்றும் முன்னாள் நண்பர்களும் தற்போது பிரசுரிக்கப்பட்ட செய்திகளில் அவர் மேல் வேகமாக அதிக அளவில் பாராட்டுக்களைப் பொழிந்துள்ளனர்.

ஆனால், இந்தியாவின் பெரும் CJI க்களின் அரங்கில் அவர் நினைவுக்கூறப்படுவாரா? அதற்கு வழியே இல்லை என மிகவும் திறன் மிக்க CJI வின் எடுத்துக்காட்டாக எம்.என்.வெங்கடாசலையாவை கூறினார் ஒரு முதிர்ந்த வழக்கறிஞர்.

ஆனால் சரியான நேரத்தில், சரியான பதவியில், சரியான மனிதராக கப்பாடியா இருந்தார் என்பதை மறுப்பவர்கள் வெகுசிலரே.

No comments:

Post a Comment