Friday, 26 October 2012

கணவர்களுக்கு எதிரான கொடுமைகள்


இந்தியாவில் திருமணம் என்பது ஒரு ஆணுக்கும், பெண்ணுக்கும் இடையேயான பந்தமாக, சமுதாயத்தில் சமூக அந்தஸ்தை பெறவும் ஒரு கருவியாகப் பார்க்கப்படுகின்றது. மற்றுமல்லாது திருமணம் என்பது இனவிருத்திக்கும், மற்றும் குழந¢தை பெறவுமே செய்யப்படுகின்றது. வெஸ்ட்மார்க்கின் கருத்துப்படி, திருமணம் என்பது ஒரு நிறுவனமாகும். திருமணங்களின் எண்ணிக்கை அதிகரிப்பதைப் போலவே, ஒவ்வொரு நாளும் திருமண முறிவுகளும், கணவன் அல்லது மனைவியின் தவறினால் அதிகரித்துக் கொண்டே இருக்கின்றன. என்னதான் இ.பி.கோ 498&கி மற்றும் குடும்ப வன்முறை சட்டத்தின் கீழ் கணவன் மற்றும் அவரது குடும்பத்தினர் மீது மனைவியால் வழக்குகள் பதிவு செயல்பட்டாலும், பாதுகாப்பு மற்றும் விவாகரத்திற்காக பதிவு செய்யப்படும் புகார்களில் அனைத்துமே உண்மையான முறையில் பதிவு செய்யப்படுவதில்லை. கல்வி, வேலை வாய்ப்பு கள், பொருளாதார சுதந்திரம் மற்றும் சமூக நடத்தை என்று அனைத்திலும் கிடைத்த சுதந்திரம் பெண்களின் அந்தஸ்தில் பெரிய மாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. சம உரிமையின் தராசு முள் பெண் களுக்கு சாதகமாக சாய்ந்துள்ள நிலை ஏற்பட்டுள்ளது.

கொடுமை என்பது மனித தன்மையற்ற செயலாகும். மற்றும் இது மனரீதியான கஷ்டங்களை ஏற்படுத்தி, மற்றவருடைய ஆரோக்கியம் மற்றும் வாழ்வை பாதிப்படைய செய்வதாகும். கொடுமை என்பது உடலியல் அல்லது மனரீதியான செயலாகவும், கணவன் அல்லது மனைவியினால் செய்யப்படுவதாக இருக்கலாம். என்னதான் காலங்காலமாக, பெண்கள், கணவர் மற்றும் அவரது உறவினர்களால் கொடுமைகளுக்கும் வன்முறை களுக்கும் ஆளாகியிருந்தாலும், இப்போது இவ்வாறு சொல்வது பொருத்தமானதாகாது.

ஏனெனில் மனைவியினால் கொடுமைகளுக்கும், வன்முறைகளுக்கும் உள்ளாகும் கணவர்களின் வழக்குகள் நாளுக்கு நாள் அதிகமாகிக் கொண்டே வருகின்றது. கொடுமை என்பது விவாகரத்தை பெறுவதற்கு மிக முக்கியமானக் காரணமாகும் என 1935ன் இந்து திருமணச் சட்டம் 13(1) (i-a)  பிரிவின் கீழ் விளக்கப்பட்டுள்ளது. மேலும் ஒரு வழக்கை பதிவு செய்யும் தரப்பினர் கணவன் மற்றும் மனைவி இணைந்து வாழ்வது கூடாத காரியம் என்பதை ந¤ரூபிக்க வேண்டும்.

நமது சட்டப்பிரிவின் கீழ் அங்கீகாரம் பெற்றுள்ள பெண்களுக்கு பாதுகாப்பிற்காக பொருந்தும். அநேக சட்டங்கள் உள்ளன. இந்த சட்டங்களின் சார்பு தன்மை என்னவெனில் இந்தியாவில் உள்ள மற்ற எல்லா சட்டங்களையும் விட இதில் குற்றச்சாட்டப்பட்டவரே தனது குற்றமின்மையை நிரூபிக்க வேண்டும். இதனால் பாதிக்கப்பட்ட நபர் மனைவியினால் புகார் செய்யப்பட்ட உடனே கணவரும் அவரது குடும்பமும் உடனே கைது செய்யப்படுவார்கள். இதனால், அவர்கள் சட்டத்தின் பார்வையில் குற்றவாளிகளாகக் கருதப்படுவார்கள். இ.பி.கோ.வின் 498A சட்டப்பிரிவின்படி, மனைவியும் அவரது பெற்றோர் குடும்பமும் குடும்பத்தினர் யாரையாவது ஒருவரையோ அல்லது அனைவரின் மீதோ கூட உடலியல் அல்லது மன ரீதியான கொடுமைகளுக்கான புகாரைச் சுமத்தலாம். ஆனால் இந்த வழக்கின் நம்பகத்தன்மை நீதிமன்றத்தினால் ஆராயப்படும். ஏனெனில், இப்பிரிவு பிடியாணையின்றி கைது செய்யவும், ஜாமீன் வழங்க இயலாததும் மற்றும் சேர்க்கக்கூடாததுமான பிரிவாகும். கணவனுக்கு எதிரான கொடுமைகளுக்கான காரணங்கள் என்ன?

என்னதான் சந்தர்ப்பங்களையும், சூழ்நிலைகளையும் ஆராய்ந்து அவற்றின் அடிப்படையில் வழக்கை முடிவெடுப்பது நீதிமன்றத்தின் கடமையாக இருந்தாலும், என்ன காரணத்தினால் இக்கொடுமைகள் செய்யப்பட்டது என்பது ஒரு முக்கியமான அம்சமாகும். ஏனெனில் கணவருக்கு எதிரான சட்டங்களை மனைவி தவறாக பயன்படுத்துவது என்பது சமூகத்தில் நாளுக்கு நாள் அதிகமாகிக் கொண்டே வருகின்றது. மேலும் அப்பட்டமாக இந்தியாவின் சில நகரத்தில் உள்ள படித்த பெண்மணிகள் காரியங்களை மாற்றி, இந்த சட்டங்களை உபயோகித்து, இவற்றை ஆயுதங்களாக்கி தங்களது கணவர்கள் மற்றும் ஒன்றுமறியா உறவினர்கள் மீது உபயோகித்து தனிப்பட்ட வஞ்சத்தை தீர்த்துக் கொள்கின்றனர். கண வனுக்கு எதிராக கொடுமைகளை சில காரணங்கள் மூலம் நிரூபிக்கலாம்.

இபிகோவின் 498-கி பிரிவு மற்றும் குடும்ப வன்முறை சட்டம் வரதட்சணை சட்டங்களை அவமதித்
தல் ஆகியவற்றின்படி கணவர் மற்றும் கணவரின் உறவினர்களின் மீது பொய்யான புகார்கள் மூலம் மனைவி குற்றஞ்சுமத்துவது.

மனைவியினால் கைவிடப்படுதல், அதாவது மனைவி வேண்டுமென்றே பிரிந்து வாழ்வதற்காக, இணைந்து வாழ மறுப்பது.

மனைவியின் தவறான நடத்தை அல்லது திருமண பந்தத்தில் இருக்கும்போதே வேறொரு நபரிடம் மனைவி பாலியல் உறவு வைத்திருப்பது. மேலும் நடத்தை தவறிய மனைவியை தண்டிக்க கடுமையான சட்டம் கொண்டுவரப்பட வேண்டும்.

விவாகரத்திற்கான முறையான நடைமுறைகளைச் செய்யாமல் மனைவிக்கு இரண்டாம் திருமணத்தை செய்ய முற்படுவது. மனைவி, கணவனின் வீட்டை விட்டு சென்று விடுவதாகவும் மற்றும் தற்கொலை செய்து கொள்வதாகவும் மிரட்டுவது.

கணவரின் சட்டையை கிழிப்பது, சரியான நேரத்திற்கோ அல்லது சரியான முறையிலேயோ உணவை சமைக்க மறுப்பது மற்றும் கணவனின் உறவினர்கள் முன்பு தாலியை அறுத்தெறிவது போன்ற மனைவியின் கொடுமையான நடத்தைகள்.

உறவினர்கள் முன்பு கணவரை இழிவுபடுத்தும் விதமாக திட்டுதல் மற்றும் பழிசுமத்துதல், மேலும் சில நிலைகளில் கணவனின் அலுவலக பணியாளர்கள் முன்னிலையில் திட்டுதல்.

போதுமான காரணங்கள் இல்லாமல் மனைவி கணவருடன் தாம்பத்திய உறவு கொள்ள மறுப்பது என்பது கொடுமைக்கான காரணாகக் கருதப்பட்டு, கணவன் விவாகரத்திற்கு மனுவை பதிவு செய்யலாம்.

குடும்ப உறுப்பினர்கள் மற்றும் பெரியவர்கள் முன்னிலையில் கணவரின் மதிப்பைக் குறைக்கும் விதத்தில் இழிவுப்படுத்தும் வார்த்தைகளை உபயோ கித்தல். கணவர் மற்றும் உறவினர்கள் மீது முதல் தகவல் அறிக்கை (திமிக்ஷீ) யை பதிவு செய்து, பின்பு அது பொய் யானது என நிரூபிக்கப்படுதல்.

கணவருக்கு எதிராக மனைவியின் நடத்தை மற்றும் ஒழுக்கங்கள் தவறாக இருப்பது, அதாவது கணவனை அவரது வீட்டைவிட்டு வெளியேறும்படி கட்டாயப்படுத்துதல், தனிக் குடித்தனத்திற்காக கட்டாயப்படுத்துதல், கணவருக்கும் அவரது குடும்பத்தின ருக்கும் எதிராக மரியாதைக் குறைவான நடத்தை மற்றும் மனரீதியாக கொடுமைப்படுத்துதல்.

கொடுமைக்கான வேறு சில காரணங்கள், அதாவது மனைவியின் மனநலம் பாதிக்கப்படுவது, உடற்சுகவீனம், மனைவியின் மலட்டுத் தன்மை, வேறு ஒரு நபருடன் மனைவி சட்டவிரோதமான உடலுறவு வைத்திருப்பது மற்றும் நோயினால் மனைவி பாதிக் கப்படுவது. திருமண பந்தத்திற்கு வெளியே கணவனுக்குத் தெரியாமல் மனைவி உறவினை வைத்திருப்பதும் கொடுமைக்கான காரணமாகும்.

நம்பகமற்ற தன்மையுடைய கணவன் மற்றும் கணவரின் குடும்பத்திற்கு எதிராக மனைவி தொடங்கும் குற்றவியல் விசாரணைகள்.

3 comments:

 1. புகார்களில் அனைத்துமே உண்மையான முறையில் பதிவு செய்யப்படுவதில்லை...
  கணவரின் சட்டையை கிழிப்பது,
  உண்மை.உண்மை.உண்மை.உண்மை.உண்மை.
  Manidhanai mirugamaga matruvadhu ippadithan..

  ReplyDelete
 2. என்ன சொல்லி எவன் கேட்க போகிறான். பெண்ணடிமை தனம் எனக்கூவும் விலைமாதர் கூட்டத்தை ஒழித்தால் தான் சரி வரும்.

  ReplyDelete
 3. மேற்கூறிய கொடுமைகள் என் மனைவியால் எனக்கும் நடந்து கொண்டு இருக்கிறது.என்னையும் என் குடும்பத்தையும் காப்பாற்ற வழி சொல்லுங்கள்.

  ReplyDelete