Friday, 26 October 2012

மாற்றுவழி இனப்பெருக்கம்


மாற்றுவழியில் இனப் பெருக்கம் செய்வதன் மருத்துவ முன்னேற்றங்கள் வெகு சுலபமாக கலாச்சாரத்தை மீறியதன் மூலம், ஓரினத் தம்பதியரை சில நேரங்களில் பல வருடங்களுக்கான விரக்தியை சந்திக்க வைத்துள்ளன. ஓரினத் தம்பதியர் குடும்பங்களைத் தொடங்குவது என்பது என்.பி.சி. தொலைக்காட்சியில் முதன்மை நேரத்தில் "நியூ நார்மல்" என்கிற புதிய தொடரை ஆரம்பிக்கும் வகையில் அதிகப் பிரசித்தி பெற்றுள்ளது. இதில் இரண்டு ஓரினச் சேர்க்கையாளர்களான ஆண்கள் வாடகைத் தாய் மூலம் தங்களது குடும்பத்தை தொடங்க முயலுவதே அடிப்படைக் கதையாகும். ஆனால், அங்குள்ள தொடர்புடைய இன்னொரு நிலையமான யூடாவில் உள்ள சால்ட் மேக் நகரத்தின் நிலையமொன்று இந்த நகைச்சுவைத் தொடரை குடும்பத்தை பற்றின இந்த நிகழ்ச்சி குடும்பத்துடன் பார்ப்பதற்கு ஏற்றதல்ல என்று தடை செய்துள்ளது.

இந்த நிகழ்ச்சியிலும், பிரயன் மற்றும் டேவிட் ஆகிய இருவரும் அந்த வாடகைத் தாயின் குருட்டுப்பிடியான பாட்டியுடன் சண்டையிட வேண்டியுள் ளது. இந்த புதிய வகையான சாதாரணம் என்பது, ஓரிகான் இனப் பெருக்க மருத்துவமான, ஓரின தம்பதியருக்கான முன்னணி இனவிருத்தி மருத்துவமனையின் ஜோனதான் கிப் சொல்வதுப் போல, இது அமெரிக்காவிற்கு, நமது நாட்டின் குடும்பங்கள் எவ்வாறு வகைப்பட்டு இருக்கின்றன என்பதைக் காண்பிக்க எடுத்த முயற்சி எனவும் ஆகலாம்.  ஆனால், இது வாடகைத் தாய் முறையை முயற்சிக்க விழையும் தம்பதியர் பெறும், அனுபவத்தை, ஏற்றுக் கொள்ள முடியாத கலாச்சாரத்தை எதிர்கொல்லும் போது, ஏற்படும் நிகழ்வுகளுக்கு இதுவே உதாரணமாகும்.

2010&ன் அமெரிக்காவின் மக்கள்தொகை கணக்கெடுப்பின் தகவல்படி, தோராயமாக நான்கில் ஒரு பகுதியில், அனைத்து ஓரினக் குடும்பங்களும் குழந்தைகளை வளர்க்கின்றனர். இந்த கணக்கெடுப்பு எத்தனை பேர் மாற்றுவழி இனப்பெருக்கத்தை உப யோகித்தனர் எனக் கேட்கவில்லை. ஆனால், ஒரு வாடகைத் தாயை தேடுகையில், அந்த தம்பதியருக்கு, இந்த விலையுயர்ந்த முறை பல விரக்திகளுடன், சிறு அளவு ஒத்துழைப்பே கிடைக்கின்றது.

மாற்றுவழி இனப் பெருக்கத்திற்கான செலவுகள் மிக அதிகமாவதுடன் தம்பதியருக்கு அது சவாலாகவும் அமைகிறது.  வாடகைத் தாய்க்கான கட்டணங்கள் 20,000 முதல் 40,000 அமெரிக்க டாலர்கள் வரை ஆகலாம். அதாவது இந்திய மதிப்பிற்கு 10 லட்சம் முதல் 20 லட்சம் வரை.

- வாடகைத் தாய் காலத்திற்கான காப்பீட்டின் பாதுகாப்பு 15,000 முதல் 25,000 அமெரிக்க டாலர்கள் வரை.

- இந்த நிகழ்வை ஒருங்கிணைக்க கட்டணமாக 15,000 முதல் 22,000 அமெரிக்க டாலர்கள் வரை.

- கருமுட்டை தானம் செய்பவரின் கட்டணம், 5,000 முதல் 10,000 அமெரிக்க டாலர்கள் வரை.

கருமுட்டை தான நிகழ்வை ஒருங்கிணைக்கும் கட்டணமாக 4,000 முதல் 8,000 அமெரிக்க டாலர்கள் வரை.

- மருத்துவர் அலுவலகக் கட்டணம், சோதனை சாலை, மருந்துகள் போன்றவை 13,000 முதல் 29,000 அமெரிக்க டாலர்கள் வரை, அதற்கு மேலும் ஆகலாம்.

- மேலும் இடைச் செலவுகளாக வழக்கறிஞர் கட்டணங்கள், மனநலம் மற்றும் மரபணு ஆலோ சனைகள், தானம் கொடுப்பவர்களுக்கான பிரச்சினைகளுக்கான காப்புறுதி திட்டங்கள், கூடுதலாக 1,500 முதல் 5,000 அமெரிக்க டாலர்களோ அதற்கு மேலோ பயணச் செலவுகளே ஆகலாம்.

வழக்கறிஞரான 38 வயது ஏப்ரல் நெல்சனும் மற்றும் மேஃபீல்டின் பெருவணிக பயிற்சியாளரான 49, வயது மார்கரேட் ஸ்ரீ பியோரும் பல வருடங்களான உறவில் குழந்தைகளை வைத்துக் கொள்வதா அல்லது, வேண்டாமா? என தர்க்கித்து வந்தனர். ஏழு வருடத் தம்பதியரான அவர்கள் செயற்கை கருத்தரிப்பு முறையை தேர்வு செய்து, இப்பொழுது இரட்டை குழந்தைகளைப் பெற்றுள்ளனர். ஆண் குழந்தைக்கு அடிசன் என்றும் பெண் குழந்தைக்கு ஏவெரி எனப் பெயர் வைத்தனர் அவர்களுக்கு 4 வயதாகின்றது.

2007ஆம் ஆண்டின் கோடைக் காலத்தில் கருத்தரிப்பது எப்படி என்பதாக நெல்சன் மற்றும் ஃபியோர் ஆகியோரின் பயணம் ஆரம்பமானது ஃ பியோரின் வயது மற்றும் ஹார்மோகன்கள் அளவின் காரணத்தினால், அவரால் ஆரோக்கியமான முட்டையை உருவாக்கும் வாய்ப்பு மிகக் குறைவு என மருத்துவர்கள் கூறியதை அடுத்து இந்த தம்பதி யின் தங்களது முதல் தடங்களை சந்தித்தனர்.

சில மாதங்கள், இத்தம்பதியினர் அவர்களுக்குள்ள வழிகளை குறித்து ஆலோசித்தனர். இதில் நெல்சன் சட்டக் கல்லூரியில் பாதிப் படிப்பில் இருக்க ஃபியோருக்கு கருத்தரிப்பின் அனுபவம் தேவைப்பட்டதால், அவர்கள் செயற்கை கருத்தரிப்பு முறையை முயற்சிக்க முடிவெடுத்தனர் (மிக்ஷிறி) . இதில் ஃபியோருக்குள் செலுத்த நெல்சனுடைய கருமுட்டைகள் உபயோகப்படுத்தப்பட்டன.

ஃ பியோரின், ÔÔஇந்த முயற்சி ஒரே சமயத்தில் உற்சாகமாகவும் மற்றும் பயமாகவும் மற்றும் களைப் பூட்டுவதாகவும் இருந்ததுÕÕ, சில நேரங்களில் இருவருமே ஹார்மோன் ஊசிகளை போட்டு, ஒவ்வொரு வாரமும் கருத்தரிப்பு மருத்துவமனைக்கு பலமுறை செல்ல நேர்ந்தது. தம்பதிகள் அவர்கள் செய்வது என்னவென்று அறிந்துக் கொள்ள கட்டாய ஆலோசனை நேரங்களை மேற்கொண்டனர். மேலும் நெல்சன் கருமுட்டை தானமளிப்பவர்களுக்குத் தேவைப்படும் இன்னும் அதிகமான பரிசோதனைகளில் பங்கெடுக்க வேண்டியிருந்தது. மருத்துவமனை வெளிப்படையாக ஆமோதித்தாலும், அதன் கோட்பாடுகளும் அல்லது சட்டங்களும் அவர்களை எவ்வாறு வகைப்படுத்த வேண்டும் என்பதில், உண்மையாக தயாராய் இருக்கவில்லை. ஃபியோர் நெல்சனின் வாடகைத் தாய் என வகைப்படுத்தப்பட இயலவில்லை. ஏனெனில், நெல்சல் கருத்தரிக்க முடியாது என்பதற்கு எந்தவொரு மருத்துவக் காரணமுமில்லை. எனவே, நெல்சன், ஃபியோருக்கு கருமுட்டை தானம் அளிப்பவர் என்று வகைப்படுத்தப்பட்டார்.

தம்பதியினர் அவர்கள் தரப்பில் சட்டப்பூர்வமான முறையிலும் சரியாக இருக்க வேண்டி இருந்தது. நெல்சனின் வாக்குறுதிபடி, ÔÔஎங்களது அனுபவத்தின் மூலம், இது போன்ற துறைகளில் விஞ்ஞானத்தைவிட சட்டம் எவ்வளவு பின்தங்கிய நிலையில் உள்ளது என்பது தெளிவாகத் தெரிகின்றது. முட்டைகளுடனான என்னுடைய உரிமைகள் அனைத்தையும் நான் முடித்துவிட வேண்டி இருந்தது. ஆனால், அது வளர்ச்சியடைந்தவுடன், நாங்கள் இருவரும் இணைந்த பொறுப்பை பெற்றோம். அதாவது அவளோ அல்லது நானோ யாருமே மற்றவரது, அனுமதியின்றி வளர்ந்த கருவின் உபயோகத்தைக் குறித்து முடிவெடுக்க இயலாது. ஆனால், வளர்ந்த கரு உட்செலுத்தப்பட்டவுடன், சட்டப்பூர்வமாக சிசுவுக்கும் எனக்கும் மறுபடியும் தொடர்பின்றி ஆனது என்று கூறினர்.

பெதெஸ்தாவின், சாவோஸ் சட்டக் குழுமத்தின் மைக்கேல் சாவோஸ், இரட்டையர்கள்  பிறப்பதற்கு முன்பே அத்தம்பதியர் தத்தெடுப்பதற்கான அனைத்து முறைகளையும் தயாராக வைத்திருந்தனர். அவர்களது வழக்கறிஞர் அதை பதிவு செய்தவுடன், முறையான தத்தெடுத்தல் இரண்டு மாதங்களுக்குள் நடைபெறும்  என்று கூறினார்.

பிறப்பு சான்றிதழ்கள் பெற்றோர் எண்.1 மற்றும் பெற்றோர் எண். 2 என்று மாற்றி மறுபடியும் வழங்கப்பட்டது. நெல்சன், குழந்தை பராமரிப்பு என்பதன் அடிப்படையில் எங்களது குடும்பம் பாதுகாக்கப்பட்டுள்ளது என்பது எங்களுக்கு மகிழ்ச்சியை தந்தாலும் மரபணு முறையில் என்னுடைய குழந்தைகள் என்று நன்றாக அறிந்த பிறகு, பெற்றோர் என்ற தகுதியை தருமாறு நீதிபதியின் முன்பு நிற்பது மிக தரக்குறைவாக இருந்தது என்று கூறினார்.

மாற்றுவழி இனப்பெருக்கத்தை முயற்சிக்க நினைக்கும் தம்பதியர் முதலில் செய்ய வேண்டியது அதைப் பற்றி நன்கு அறிந்துக் கொள்வதே கடந்த 20 முதல் 30 வருடங்களில் மட்டுமே நவீன கருத்தரிப்பு முறைகளில் ஏற்பட்ட தொழில்நுட்ப மாற்றங்கள், ஓரினத் தம்பதியர் குழந்தைகள் பெறுவதற்கான வாய்ப்புகளை அதிகப்படுத்தியுள்ளது. நம்முடைய இந்த நெடிய அனுபவத்தினால் ஓரினத் தம்பதிகள் குடும்பங்கள் தொடங்க ஒத்துழைப்பு வழங்கும் நிலைக்கு வந்துள்ளோம். இன்னும் கூட சில அனுபவங்களை நாம் கடக்க வேண்டும் என்று ஷெர்மன் ஓக்ஸ், கலிஃபோர்னியாவைச் சேர்ந்த கருத்தரிப்பு சிகிச்சை, தத்தெடுத்தல் மற்றும் வாடகை பெற்றோர் போன்றவற்றில் சிறப்பு சிகிச்சை அளிக்கும் அபிகெய்ஸ் கிளாஸ் கூறுகிறார்.

ஒவ்வொரு பத்தாண்டுகளும், கருத்தரிப்பு மருத்துவத்தில் பல நவீன முன்னேற்றங்களை ஏற்படுத்துகின்றன மற்றும் மாற்றுவழி இனப்பெருக்கம் பெரிதளவில் மாறியுள்ளது. கடந்த ஐந்தாண்டுகளில் மட்டுமே, கருமுட்டையை உறைய வைக்கும் முறைகளில் மாற்றங்கள் ஏற்பட்டு, கருமுட்டையின் வாழ்நாள், கருத்தரிக்கும் விதங்கள் மற்றும் கர்ப்பங்களின் விகிதங்களை மேம்படுத்தியுள்ளன. முன்னரே பரிசோதனை செய்து உறைய வைத்த முட்டைகளை வியாபார ரீதியில் வழங்கும் கருமுட்டை தான வங்கிகள் இத்துறைக்கே மிகவும் புதியவையாகும். இவ்வங்கிகள் எப்போதும் எந்த வகையான குடும்பத்திற்கும் வழங்குகின்றன. ஆனால், அவைகளை புதிய மாற்றங்களைப் போல மிக அதிக வெற்றிகளைத் தருவதாகக் கருதப்படுவதில்லை. ÔÔநமது துறையில் உள்ள நம்பிக்கை என்னவெனில், விஞ்ஞானம் அடையக் கூடிய வளர்ச்சியினால் தேவையான பெற்றோருக்கு சரியான விலையில் இந்த முழு முயற்சியையும் அளிக்க முன்னரே உறைய வைக்கப்பட்ட கருமுட்டைகள் சாதாரணமாக கிடைக்கப்பெறும் என்பதே என்று கலிஃபோர்னியாவின் டொலுகா லேக்கில் கிஃப்ட் ஜர்னி என்னும கருமுட்டை தானம் செய்யும் நிறுவனத்தின் தலைவரும், கருமுட்டை தானத்திற்கு உள்ளிருப்போரின் வழிகாட்டி என்னும் ஒரு சிறந்த விரிவான பெற்றோர் ஆகப்போகிறவர்கள் அனைவருக்குமான புத்தகத்தின் ஆசிரியருமான வென்டி வில்சன் மில்லர் கூறுகின்றார்.

ஆனால், வேகமாகச் செல்லும் நவீன மருத்துவத்தின் வேகத்திற்கு கலாச்சாரத்தினால் ஈடு கொடுக்க முடியவில்லை. மாற்றுவழி இனப்பெருக்கத்தை முயற்சிக்கும் ஓரின தம¢பதியருக்கான ஒட்டுமொத்த வளங்கள் இல்லாமையும், ஒத்துழைக்கும் குழுக்கள் இல்லாததும் மிகுந்த விரக்தியை அளிக்கின்றது. வில்சர் மில்லர், கருமுட்டை தானமளிப்பவர்களைத் தேடும் ஓரின குடும்பத்தினருக்கு போதுமான மேம்பட்ட வளங்கள் உள்ளதென நான் நம்புகிறேன் என்று கூறுகிறார். வளங்களில், எந்த நிறுவனங்களும் மிக்ஷிதி மருத்துவமனைகளும் தங்களை ÔÔஓரினச் சேர்க்கையாளர்களின் நண்பர்கள்ÕÕ என்று கருதுவதோடு, தங்களது அனைத்து கருமுட்டை தானமளிப்பவர்களையும் ஓரின தம்பதியர் அல்லது தனியான ஓரினப் பெற்றோர் ஆகியோருக்கு தானம் செய்ய சம்மதமா என வெளிப்படையாக கேட்பதும், இருக்க வேண்டும். வில்சன் & மில்லர், ÔÔநமது தானமளிப்பவர் அனைத்து வகையான குடும்பங்களுடன் இணைந்து உழைக்க தயாரா என்பதை அறிந்து கொள்வது முக்கியமாகும். (நமக்கு மட்டுமாவது) ஏனெனில், அதுவே நமக்கு வாடிக்கையாளர்களைத் தரும், எனக் கூறினார்.

நெல்சன் மற்றும் ஃ பியரோ, வடக்கு வெர்ஜூனியா மற்றும் அட்லாண்டாவில் அவர்களது நண்பர்கள் மற்றும் குடும்பங்களிடம் இருந்து அவர்கள் பெற்ற ஒத்துழைப்பிற்கு நன்றியுள்ளவர்களாக இருக்கின்றனர். நெல்சன், ÔÔஎங்களது, அக்கம்பக்கத்து, வீட்டாரே எங்களுடைய குடும்பத்தினர் எங்களுக்கு வீட்டில் இருக்கும் திருப்தியை தருவது என்னவென்றால், பெரும்பாலான நாட்களில் நாங்கள் ஓரினச் சேர்க்கையாளர்கள் என்பதோ ஓரினச் சேர்க்கை உறவில் இருக்கின்றோம் என்பது என் நினைவுக்கு வருவதில்லை. நாங்கள் இந்த தெருவில் ஒரு நாளைக்கு விட்டால் 25 தடவைகள் கூட அவர்களது ஹாட் வீல்ஸ் மூன்று சக்கர சைக்கிள்களில் சென்று வரும் முரட்டுத்தனமான இரண்டு 3.5 வயது குழந்தை களுடைய ஃபியோர் & நெல்சன் தான். நாங்கள் இப்போது, வெறும் அடிசன் ஏவெரியின் பெற்றோர் தான் என்றுக் கூறுகின்றார்.

அனைத்து தம்பதியினரும் மோசமான தடங்கல்களைச் சந்திப்பது கிடையாது. நியூயார்க் நகரத்தின் 39 வயதான ரிச் பாலேமோவும் மற்றும் 40 வயதான ஸ்டீவ் மாசா ஆகிய இருவரும் தங்களை அதிர்ஷ்டசாலிகளாக கருதுகின்றனர். பலமோ, எங்களது கருமுட்டையை தானம் அளித்தவர், நாங்கள் வாடகைத் தாய்க்கான சர்க்கில் சரோகசி சைட் என்னும் வலைதளத்தில் பார்த்த முதல் பெண்மணியாகும். மேலும் அவரோடு நாங்கள் ஸ்கைப்பில் பேசிய முதல் நிமிடத்தில் இருந்தே எங்களுக்கு அவர்களைப் பிடித்துவிட்டது. கருமுட்டையை தானமளிப்பவர் அனைத்து சோதனைகளிலும் தேறி அநேக முட்டைகளை அளித்தார். வாடகைத் தாயுடன் அதே தான் நடந்தது. சர்க்கிளின் மூலம் எங்களிடம் காட்டப்பட்ட முதல் பெண் அவர்தான். மருத்துவம் அல்லது பிற விஷயங்கள் என எதிலும் எங்களுக்கு எந்தவித பிரச்சினைகளும் ஏற்படவில்லை என்று கூறினார்.

தம்பதியினர் இருவருமே அவர்கள் சந்திக்கும் முன்பே, மாற்றுவழி இனப்பெருக்கத்தைக் குறித்து யோசித்திருந்தனர். (அவர்கள் தனிப் பெற்றோராய் இருந்த போதே செய்திருக்கலாம்). அவர்களது உறவின் ஆறு மாத காலத்திற¢குள் அவர்கள் மாற்றுவழி இனப் பெருக்கத்தைக் குறித்து உறுதியாய் இருந்தனர். திருமணமாகி ஒரு வருடம் முடிவடைந்துள்ளது. அத்தம்பதியினர், முதலில் வாடகைத் தாயையும், கருமுட்டை தானமளிப்பவரையும் தேர்வு செய்வதைக் குறித்து சிறிது, பதற்றத்துடனே இருந்தாகச் சொல்கின்றனர்.

முதலில் மிகப் பெரியதாகவும் சிறிது பயமாகவும் இருந்தது. ஏனெனில், அநேக காரியங்கள் நடந்தேர வேண்டும். ஆனால் எங்கு ஆரம்பிப்பது என்று தெரியவில்லை என்று மாசா சொன்னார்.

தம்பதியருக்கு இருந்த மிகப்பெரிய சவால் என்னவென்றால், மிஸ்ஸோரியில் இருந்த அந்த வாடகைத் தாயிடம் இருந்து இவர்கள் வெகு தொலைவில் இருந்தனர். பலேமோ, எங்களிடம் இருந்து எங்கள் குழந்தை பல மாகாணங்களைத் தாண்டி இருப்பதை நினைக்கும் போது சிரிது கஷ்டமாக இருந்தது. ஆனால் எங்களது வாடகைத் தாய் அவரது கர்ப்பகால வயிற்றை புகைப்படம் எடுத்து எங்களுக்கு ஒவ்வொரு வாரமும் அனுப்பி உதவினார் என்று கூறினார். தம்பதியினரிடம் அவர்களது வாடகைத் தாய் முதல் முயற்சியிலேயே கர்ப்பம் அடையாமலும் போகலாம் என்று எச்சரிக்கப்பட்டனர். எனவே, அவர்கள் நிறைய எதிர்ப்பார்க்கவில்லை. ஆனால், அவர் கருவுற்றார். தற்போது 20ஆம் வார அல்ட்ரா சவுண்ட் பரிசோதனைக்காக அவர்கள் விமானம் மூலம் மிஸ்ஸோரி சென்று, அவர்கள் ஒரு ஆரோக்கியமான பெண் குழந்தையை பெறப்போவதை அறிந்தனர்.

பலேர்மோவுக்கும், மாஸாவுக்கும் ஏற்கெனவே இந்த முறைகளை கையாண்ட பல நண்பர்களும் தெரிந்தவர்களும் பெரிய ஒத்துழைப்பாய் இருந்தார்கள். ÔÔஅவர்கள் குடும்பங்களை தொடங்கும் போது சந்தித்த அனைத்தையும் குறித்து மிகவும் வெளிப்படையாக எங்களுடன் பேசினார்கள், அது நாங்கள் சந்திக்கவிருப்பதைக் குறித்த ஒரு தெளிவான சிந்தனையை எங்களுக்கு அளித்ததுÕÕ என்று பலேர்மோ சென்னார். சர்க்கிள் சரோகேசி மற்றும் சிஜி இனவிருத்தியுடன் இணைந்து, இந்த தம்பதியினர் நியூயார்க் நகரகத்தின் லிநிஙிஜி சமூகக் கூடத்தில் நடைபெற்ற ஓரினத் தம்பதியருக்கான வாடகைத்தாய் முறை பற்றிய கருத்தரங்கிலும் கலந்து கொண்டனர். அவர்களது குடும்பம் மற்றும் நண்பர்களிடம் இருந்து இத்தம்பதியினர் பெற்ற அன்பு, ஒத்துழைப்பு மற்றும் அறிவுரை அவர்களது அனுபவத்தை இன்னும் மேம்படுத்தியது. ÔÔநாங்கள் முதல் நாளில் இருந்தே எங்களுடைய குடும்பம் மற்றும் நண்பர்களுக்கு தகவல் தெரிவித்ததன் மூலம் இதில் அவர்களை பங்குபெற செய்தோம். அவர்களில்லாமல் எங்களால் இதை செய்ய முடியாது என்றில்லை. ஆனால், அது கடினமாக இருந்திருக்கும். அதை நாங்கள் விரும்பவில்லைÕÕ என பாலேர்மோகூறினார்.

மாற்றுவழி இனப்பெருக்கத்தை தேர்வு செய்யும் தம்பதிகளுக்கு, இந்த முறையை கடந்து சென்ற தம்பதிகள் எவ்வளவு பேரை சந்தித்து பேச முடியுமோ பேசுங்கள் என பலேர்மோவும், மாஸாவும் ஆலோசனைத் தருகின்றனர். மற்றவர்கள் என்ன அனுபவித்தார்கள் என்பதை கேட்பது மிகவும் உபயோகமாய் இருக்கும். இதனால் செய்முறையை குறித்த உண்மையான எதிர்பார்ப்புகள் இருக்கும் மற்றும் இதனால், மற்றவர்கள் சந்தித்த தோல்விகளில் சிலவற்றை நீங்கள் தவிர்க்கலாம்ÕÕ என மாஸா கூறுகின்றார்.

தம்பதியர் இருவருமே லாங் ஜலண்டின் பெரிய, மிக நெருக்கமான இத்தாலிய அமெரிக்க குடும்பங்களில் வளர்ந்தனர். அவர்கள் சீக்கிரமே பிறந்த நாட்கள், விடுமுறை நாட்கள், ஞாயிறு உணவுகள், கால்பந்தாட்டப் போட்டிகள், பள்ளி விழாக்கள் போன்றவற்றின் மூலம் மற்றவர்களுக்குத் துணை நிற்பதே பெரிய குடும்பத்தில் இருப்பதன் ஒரு பகுதி என்பதை அறிந்தனர்.

ÔÔநாங்கள் அந்த வகையான ஒத்துழைப்பிலும் மற்றும் அன்பிலும் வளர்ந்தோம் மற்றும் அதே முறையில் தான் எங்கள் குடும்பங்களையும் வளர்க்க விரும்புகின்றோம். எங்கள் நண்பர்களில் சிலர் எங்களது வாழ்க்கை இப்போது எங்களது மகளை பற்றியே இனி முழுவதுமாக இருக்கும் என எச்சரிக்கின்றனர். மிகவும் நல்லது நாங்களும் அதைத் தான் விரும்புகிறோம் என்று பாலேர்மோ கூறுகின்றார்.

No comments:

Post a Comment